வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, July 30, 2007

மனிதனும் தெய்வமும்

இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.

அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம் அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில் பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம் படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம் வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும் பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன் பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.

ஆன்மீகப் பயிற்சியின் பயன்

நாமே முதலில் ஆன்மீகப் பயிற்சியில் விளையும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் பிறர் வினாவுக்குத் தெளிவான பதிலளித்து மனநிறைவு பெறலாம். திருப்தியான பதிலை அனுபவபூர்வமாக, அறிவின் தெளிவோடு அளிக்க முடியவில்லையெனில் நமக்கே சோர்வு உண்டாகிவிடும். இத்தகைய சோர்வினால் பயிற்சியைக் கைவிட்டு விடுபவர்கள் பலர். இந்தக் குழப்பமும் நட்டமும் ஏற்படாதிருக்கவும் கேள்வி கேட்போருக்கு மனத் தெளிவோடும் உறுதியோடும் பதில் சொல்லவும் இங்கு ஆன்மீகப் பயிற்சியின் நல்விளைவுகளை விளக்கிக் கூறுகிறேன். 1. முறையான உடற்பயிற்சியினால் நோய் வராமல் காத்துக் கொள்ளுகிறோம். உள்ள நோய்களும் காலத்தால் குணமாகின்றன. குறைந்தபட்சம் கொடுமை குறைகிறது. 2. மனிதனின் உடலை விட முக்கியமான பொருள் உயிர். அது விஞ்ஞானக் கருவிக்கும் எட்டாதது. அவ்வளவு நுண்மையானது. அந்த உயிரை உணர்வாகப் பெறுகிறோம். தீட்சையின் முதல் நாளன்றே உயிர்மேல் மனம் வைத்து ஒன்றி ஒன்றிப் பழகி வர, அறிவு நுண்மையும், கூர்மையும் பெறுகிறது. பயிற்சியால், அறிவு பெறும் உறுதி, நுட்பம், ஆற்றல் இவை வாழ்க்கைத் துறைகள் அனைத்திலும் வெற்றியடையச் செய்கிறது. 3 அகத்தாய்வுப் பயிற்சியினால் எண்ணத்தின் தன்மையும் தன் முனைப்பால் அறிவு திசை மாறி பேராசை, சினம், கடும்பற்று, வஞ்சம், முறையற்ற பால் கவர்ச்சி, உயர்வு தாழ்வு மனப்பான்மை ஆகிய ஆறு குணங்களாக அவ்வப்போது மாறுவதும் அந்த உணர்ச்சி வயப்பட்ட குணங்களின் வழியே செயல்புரிய அவற்றால் தனக்கும் பிறர்க்கும் ஏற்படும் தீய விளைவுகளைக் கண்டுபிடிக்கவும் முடிகிறது. அடுத்துப் பயிலும் ஆசைச் சீரமைப்பு, சினம் தவிர்த்தல், கவலையொழித்தல் ஆகிய பயிற்சிகள் முறையாகப் பழகும்போது மனிதன் மனிதத் தன்மையோடு அமைதியும், இன்பமும் காத்து வாழ முடிகிறது.

உணவும் எண்ணமும்

உண்ணும் உணவு உடல் மட்டும் பாயும்

எண்ணும் எண்ணங்கள் எங்குமே பாயும்

எண்ணமோ உணவில் எழுச்சிபெறும் இயக்கமே

உண்பதோ எண்ணத்தால் உற்றுப்பார் உறவையறி

Master Course

I attended Master course in SKY meditation. This was my dream for past 3 years.It was simply amazing.I should say my responsibility increased.weather was too cool in aliyar.

Tuesday, July 24, 2007

குரு தானாக வருவார்

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்பப் பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறங்கிவிட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்திலே நம்மைப் பற்றியே நினைப்பே எழுவதில்லை. இந்த இடத்திலேதான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி ? குரு என்றால் யார் ? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும், தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்துவிடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதைவிட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய செயல், அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்துவிடும் காலத்தாலே. அதுவே குருவையும் கொண்டுவந்து கொடுத்துவிடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் துõண்டிவிடுகிறது.