வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, August 22, 2007

அனைத்து பாடல்கலும் எப்பிறப்பில் காண்பேன் இனி.....

1.இப்பாரில் பிறப்பெடுத்து இன்பமும் இன்னலுமுற்று அப்பாலுக் கப்பால் விளைந்த அருளமுதம் அறிவித்து செப்பாத் மேனிலைமேல் சிவமாக்கும் குருமேனி எப்பிறப்பில் காண்பேன் இனி.........

2. முந்தித் தவம் இருந்த புண்ணியம் இல்லாதிருந்தும் சிந்தைய்லே விந்தை விளைவித்து சாதித்தாய் ! அப்பா, அருட்குருவே, மெய்ஞான வள்ளலுனை எப்பிறப்பில் காண்பேன் இனி........
3. அறிவிற்கு இலக்கணம் அய்யனே நீ தந்தாய் அறிவை அறிவித்தாய் ; உறவை தெரிய வைத்தாய் புரிந்து, புரியவைத்து நீ பறந்து விட்டாயே ! எப்பிறப்பில் காண்பேன் இனி........
.4. விழலுக்கு நீரூற்றி வீணான வாழ்வியலை விழுமியத்துள் வளைத்து விளக்கேற்றி விளங்கவைத்து தொழுது வணங்குவதற்குள் தூரப்பற்ந்தாயே - உனை எப்பிறப்பில் காண்பேன் இனி.....
5. தந்த தவத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டோ ? இந்தப் பிறவிய்லே ஈடேற வழியுண்டோ ? வந்தப் பணிமுடிந்து வான்வழிக்கு சென்றாயே எப்பிறப்பில் காண்பேன் இனி.......
6. விஞ்ஞானம் விளைவித்த விளங்காத பக்கங்கள் - உன் மெய்ஞான விளக்கத்தில் மெய்சிலிர்த்த அனுபவங்கள் ஒவ்வாத குணம் நீக்கி அகதீபம் ஏற்றினையே....! எப்பிறப்பில் காண்பேன் இனி.........
7. பருமேனி பார்த்தபின்னும் மாறாமல் மறந்து விட்டேன் திருமேனி தெளிந்தபின்னும் தேராமல் இழந்து விட்டேன் முப்பாழ் விளங்கி முழுமை பெற தவழ்கின்றேன் எப்பிறப்பில் காண்பேன் இனி......
8. அழுது புலம்புதற்கு திருவடிகள் தெரியலையே......1 பழுதாகி வந்த வினை விடுதலைக்கு வழிய்லையே......! இப்பிறவி நீந்திப்பதம் அடைய வரம் வேண்டும் - அப்பா உணை எப்பிறப்பில் காண்பேன் இனி......

வாழ்க வளமுடன் சீனி. இளங்கோவன் சென்னை குயப்பேட்டை ஆன்மீக அறிவாலயம். சென்னை 600012

Tuesday, August 21, 2007

Why we are adviced to do excercise on mat?

நாம் உடற்பயிற்சி செய்யும்போது விரிப்பின் மீதுதான் செய்கிறோம். ஏனெனில், வெறும் தரையில் செய்யும்போது நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேற வாய்ப்பு உள்ளது. உதாரணமாக, தரை மிகவும் குளிராக இருக்கின்றது என்று வைத்துக்கொள்ளுங்கள். அப்போது வெறும் தரையில் பயிற்சி செய்தால், நமது ஜீவ காந்த ஆற்றல் வெளியேறும். பயிற்சியின் நோக்கமே ஜீவ காந்த ஆற்றலை கூட்துவதுதான். எனவே, நாம் ஒரு விரிப்பின் மீது செய்கிறோம். கை பயிற்சியின் போது, கைகளை சுழற்றும் போது, கைகளின் விரல்களை குவித்து கொள்வதும், ஜீவ காந்த இழப்பை தவிர்ப்பதர்க்குதான்.

Friday, August 17, 2007

அன்பும் கருணையுமாய்

அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.

Thursday, August 16, 2007

soul and life

கேல்வனியின் 'விலங்கின் மின்சாரமும்' வேதாதிரியின் 'சீவகாந்தமும்'... கேல்வனி என்ற அந்த இயற்பியல் அறிஞரோடு தொடர்புடைய மின் கலம் [Battery] என்ற அந்த அற்புதமான கண்டுபிடிப்பை நாம் அனைவருமே அறிவோம். ஆனால் பாருங்கள், அறிவியலில் அவ்வளவு தூரம் ஆராயப் படாத அந்த கண்டுபிடிப்பின் பகுதிஒன்றும் உள்ளது. அதை ஆராயாமல் தான் அன்றைய அறிவியல் கேல்வனியை மின்கலத்துக்குள் 'கேல்வனிசமாக' நுழைத்தது. இன்றைய அறிவியல் அதையும்¦nbsp; ஆராய்ந்து கேல்வனியை உயர்த்திக் கொண்டிருக்கிறது.கேல்வனி படித்தது இயற்பியல் அல்ல. அவர் ஒரு மருத்துவர் - போலொனா மருத்துவ பல்கலைக்கழகத்தில் படித்து பட்டம் பெற்று தன்னுடைய தந்தையை போலவே ஒரு மருத்துவராக பணியாற்றினார் அவர். அந்த கால கட்டத்தில் தான் ஒரு தவளை அவருக்கு இயற்பியல் துறைக்கு தாவ உதவி செய்தது. ஒரு முறை அவரது ஆய்வுக் கூடத்தில் ஒரு தவளையில் உடலில் தானாக தோன்றிய மின்னூடடமே அவரது கண்டுபிடிப்பின் மூலம்.¦nbsp; ¦nbsp;இதனின் original version இது தான்: "ஒரு தவளையின் தொடை நரம்பை தொடுமாறு ஒரு உலோகத்தையும் வயிற்றுப்பகுதி தசையை தொடுமாறு வேறு ஒரு உலோகத்தையும் வைத்தபோது¦nbsp; அவைகளில் மின்சாரம் தோன்றியது. இந்த மின்சாரத்துக்கு நான் 'விலங்கின் மின்சாரம் [animal electricity] ' என்று பெயர் வைக்கப் போகின்றேன்." - ; இதனின் இன்றைய இயற்பியல் பின்னணி : "இருவேறு உலோகங்கள் ஒரு மின் கடத்தும் அயனியாகும் நீர்ம ஊடகத்தில் வைக்கப்படுமாயின், ஒரு உலோக முனைக்கும் மறு உலோக முனைக்கும் இடையே நிகழும் electrons ஓட்டத் தினால் ஒரு மின்சாரம் அந்த உலோகங்களில் தோன்றுகின்றது.¦nbsp; அதனால் அந்த மின்கடத்தி¦nbsp; உலோகங்களை சுற்றி ஒரு மின் காந்த களமும் ஏற்படுகின்றது."¦nbsp; தவளையின் உடல் செல்களில் என்ன நிகழ்ந்தது என்பதை அவ்வளவாக ஆராயாத அன்றைய அறிவியல், 'உலோகத்தில் மின்னூடடம்' என்பதை மட்டும் முன்னிறுத்தி கேல்வனிஸம் தந்து அதை மின்கலமாக வெளியிட்டது என்பதை நாம் அறிவோம். ஆனால் இன்றைய அறிவியல் விடுபட்ட அந்த Bio-Electromagnetism என்பதையும் ஒரு துறையாக நிறுவி இப்படி ஒரு இலக்கணத்தை தருகின்றது - "Bio-Electromagnetism என்பது உயிரிகளின் செல்களில் நிகழும் மின்னூட்ட, மின் காந்த மற்றும் காந்த களம் பற்றி ஆராயும் அறிவியல்.[http://en.wikipedia.org/wiki/Biomagnetism]" அவர்களது ஆய்வுகளின் படி, ஒவ்வொரு செல்லின் மூலக் கூறுகளும் ஒரு ions தொகுப்பாக தன்னை மாற்றிக் கொண்டு electrons ஐ, அதாவது ஆற்றல் துகள்களை வெளியிட்டும் உள்வாங்கியும் பரிமாற்றங்களை நிகழ்த்திக் கொண்டேதான் இருக்கின்றன. இந்த ஆற்றல் துகள் exchanges தான் ஆற்றல் உள்வாங்கும் மற்றும் வெளியிடும் நிகழ்வாக ஒரு உயிரியில் வெளிக் காட்டப் படுகின்றது.¦nbsp; இந்த ஆற்றல் துகள் பரிமாற்றம் சிறு குடல் செல்களில் நிகழும் போது செறித்தல் என்றும் அதே ஆற்றல் துகள் பரிமாற்றம் மூளை செல்களில் நிகழும் போது 'எண்ணம் எழுதல்' என்றும் அழைக்கப்படுகின்றது. இதை ஒரு சிறு சமன்பாட்டின் மூலம் கற்று விடலாம். நாம் உடலில் உப்பு தாது எப்படி உருவாகின்றது என்று பார்ப்போம்.¦nbsp; சோடியம் என்ற அணு ஒரு ஆற்றல் துகளை [electron] தன்னுடைய வெளிக் கூட்டிலிருந்து குளொரின் என்ற அணுவுக்கு விட்டுத் தருகின்றது - இந்த நிகழ்வே உப்புத் தாது உருவாக காரணமாகின்றது.¦nbsp; ¦nbsp; hydrochloric acid + sodium hydroxide → sodium chloride + water HCl(aq) + NaOH(aq) → NaCl(aq) + H2O(l) H+(aq) + Cl−(aq) + Na+(aq) + OH−(aq) → Na+(aq) + Cl−(aq) + H2O(l) ஆனால் பாருங்கள், அறிவியல் ஒவ்வொரு நிகழ்வுக்கும் பின்னால் ஒவ்வொரு வகை துகள் வேண்டும் என்று தேடுகின்றது. வேதாதிரியம் எல்லா நிகழ்வுகளுக்கும் பின்னால் இருப்பது ஒரே துகள் தான் என்று வாதிடுக்கின்றது. அந்த துகள் தான் பரம அணு.¦nbsp; ஒரு துகள் அசைந்தாலே அங்கே அது காந்த அலையாக மாறுகின்றது. அப்போது, குளொரின் என்ற அணுவின் வெளிக் கூட்‌டு electron சோடியம் என்ற அணுவுக்கு நகர்ந்தால்? அதாவது, சுழன்று ஓடிக் கொண்டு இருக்கும் ஒரு பரமஅணு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு நகர்ந்தால்? காந்த அலையாக, பரம அணு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு ஓடுவதாக¦nbsp; பொருள். இந்த ஓட்டம் தான் ஆற்றலை பரிமாற்றம் செய்கின்றது. ஏனென்றால் பரம அணுக்கள் தன்னுடைய சுழல் வேகத்தையும் சுழல்-ஓட்ட நிலையையும் பொறுத்து ஒரு சிறு ஆற்றலை உள்ளடக்கமாக கொண்டுள்ளன. இந்த ஆற்றலை தூக்கிக் கொண்டு ஒரு அணு கூட்டிலிருந்து இன்னொரு அணு கூட்டுக்கு ஓடுவதால் தான் இந்த ஆற்றல்¦nbsp; பரிமாற்றம். இது ஒரு மைக்ரோஸ்க்கோபிக் பார்வை. இதனுடைய மேக்ரோஸ்க்கோபிக் பார்வை என்ன? நம் உடலில் பல மில்லியன் செல்கள் உள்ளன. ஒவ்வொரு செல்லிலும் பல மில்லியன் மூலக் கூறுகள் உள்ளன. ஒவ்வொரு மூலக் கூறிலும் சில ஆற்றல் பரிமாற்றங்கள் எப்பொழுதும் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஆக நம் உடல் முழுவதுமே ஒரு ஆற்றல் களம் தான். நம் உடல் முழுவதுமே பரம அணுக்கள் 1. 'அணுக்களில் சுழன்று ஓடியும்' மேலும் 2. 'மூலக்கூரு களுக்கு இடையே அங்கும் இங்கும் ஓடிய வண்ணமும் தான் உள்ளன' - ஆகவே காந்த அலைகள் உடல் முழுவதும் எப்பொழுதும் பாய்ந்த வண்ணம் தான் உள்ளன.¦nbsp; இப்படி ஓடும் பரம அணுக்கள் அனைத்தையும் ஒரு தொகுப்பாக கருதினால்? அந்த தொகுப்புக்குப் பெயர் தான் நுண் உடல். இதை தான் மகரிஷி அழகாக சொல்வார் "நம் உடல் முழுவதுமே ஆகாஷ் துகள்கள் சுழன்று ஓடிக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த துகள்களின் தொகுப்பே நுண் உடல் - இந்த ஆகாஷ் துகள்களின் இத்தகைய ஓட்டம் தான் உயிர் சக்தி அல்லது உயிர்." இப்படி ஓடிக் கொண்டே இருக்கும் அனைத்து துகள்களும் சுத்த வெளியில் பரவ முயற்சிக்கும். அதாவது உடலை விட்டு அலைகளாக விலகி ஓட முயற்சிக்கும் - இவைகளின் ஓட்டம் அதிர்ந்து அதிர்ந்து அழுத்தும் சுத்த வெளியால் தடுக்கப் படுகின்றது. சுத்த வெளி இவைகளை நெருக்குவதால் அங்கே ஒரு சுழல் இயக்க நிலை தோன்றுகின்றது. இந்த சுழல் இயக்க நிலை தான் மகரிஷியால் 'துல்ளிய சம தள சீர்மை ஆற்றல்"¦nbsp; என்று அழைக்கப் படுகின்றது. இந்த சுழல் இயக்கம் அந்த அலைகளை ஒரு மையம் நோக்கி சுழன்று அடைய செய்கின்றது. அந்த மையத்தில் அலைகள் நெருக்கமுற்று ஒரு அலைக் கூட்டமாக மாறுகின்றன - இந்த அலை கூட்டமே அல்லது wave packet / wave cluster ஏ நமது ஆன்மா.