கவி:
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்
இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்
அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.
தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுகேற்ப
நாவை மனதை செயலை பயன் படுத்தும்
நற் பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன் வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டு கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன இயல்பாய் பழகிக்கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையோடு ஈகை செய்வோம்
பிழை போக்கித்தரம் உயர்த்தும் மனவளக்கலையை
பேருலகமெல்லாம் பெற்று நலம் காண
தழைத்த ஒரு நல்லெண்ணம் தக்கவலுப் பெற்று
தவப்பயிற்சி உடல்பயிற்சி தற்சோதனைகள்
பிழை நீக்கி முழு ஆயுள் பெறக் காயகல்பம்
பிள்ளைகளும் குடும்பமும் நற்பேறு பெற்று துய்க்க
அழைகின்றேன் உலகோர் அன்பின் பெருக்கத்தால்
அனைவருக்கும் பொது சொத்தாம் அறிவுக்கலை கொள்வீர்
எந்தஎந்த காலத்தோ இடம் காலம் தேவை
இவை ஒப்பத் தோன்றியன எத்தனையோ செயல்கள்
அந்த செயல் அக்கருத்து இன்று சிந்தனைக்கோ
அனுபவத்திலோ துன்பம் அளிக்குமெனில் தவிர்ப்போம்
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற
இன்பநிலையதை ஏக நிலையதை அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று
தின்று திரிந்துஉறங்கவோபிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்துஅனுபவிக்க
இன்றனும்விரைந்துஎழிச்சிபெற்றுய்வீர்
பஞ்சமகா பாதகங்கள் செயதோறேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைக்காண துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலை அறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோருக்கு
துணைபுரிதல் எம் கடமையாக கொண்டோம்
தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமை பெற்று
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும் அந்த
அந்த சிருமுட்டை ஓட்டைவிட்டு நீங்கிடாது
நோய்பொருக்கா நிலையிலதை உடைத்துக்கொண்டு
நொடிப்பொழுதில் வெளியேறும் விந்தை காணீர்
தூய்நிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்
ஞானநிலை இல்லத்தில் வாழ்வோருக்கு
நல்லதல்ல கிட்டாது: வேண்டுவோருக்கு
கானகமே தகுதி: எனவும் கற்பித்த
கருதேற்ற காலமது மாறிப்போச்சு
மோனநிலையில் இருந்த இயற்கை ஒன்றே
முடிவாக மனித அறிவின் உயர்வில்
தானடைந்த பரினாமமே பிரபஞ்ச
தத்துவங்கள் என்றிந்தோர் பெருகி விட்டனர்
முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்வினைக்கு புலனைந்தும் இயக்கி
பெற்ற பழக்க பதிவு உண்டு இம்மூன்றும்
உன்னை நீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
௦ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினை பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்கு பயனாகது உணர்வீர்
அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு
நெறியோடு வாழ்கவென அழுத்தமான
நினைவலைகளை பரப்பி தவம்செய்கின்றேன்
பொறிபுலங்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்
இன்பம் இன்பம்
பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
பின் அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறி விழிப்போடு பொறுப்புணர்ந்து
ஆற்றி மனம், செயல், தூய்மை ஆனபோதும்
உறவுகளின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றி
உயர்வான துறவுநிலை உணர்ந்தபோதும்
துறவுநிலை முடிவாக பெற்றபோதும்
துய்த்த பேரின்பம் எவ்வாறு உரைப்பேன்?
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்? அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்பொருள் என்றறியும்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கி கொண்டிருக்கும் விழிப்பு வேண்டும்
இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன் ?
நன்மை தரும் நவகோள்கள் நட்சத்திர கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
தன்மயமாய் தான் அதுவாய் தவறிடாது இயக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.
மகரிஷி
உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம் பெற்ற பல பொருள் அழித்து
உள் அமைதியை இழந்து சேர்ந்தோரேனும்
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளரி ந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருத்தவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் .
மகரிஷி ஞா. க.