கவி:
நன்றாக பத்மாசனத்தில் ஆழ்ந்து
நாள்போக்கத் தூங்கிவிடப் பழகிக் கொண்டு
அன்றாடத் தேவைக்குப் பழம், பால், காய்கள்
ஆகார மாயுண்டு அறிவைப் பற்றி
என்றேனும் எவரேனும் கேள்வி கேட்க
இடமின்றி மௌனம் என்று இருந்தீர் போதும்
இன்றேனும் விழிப்படைந்து எழுந்து வாரீர்
ஈசன்நிலை எளிதாக உணர்த்துகின்றோம்
இடக்கலையும், பிங்கலையும் மாற்றி மாற்றி
இழுத்தழுத்தி விட்டதனால் என்ன கண்டீர்?
விடக்கலையே ஆச்சுதிந்தவிதப் பழக்கம்
வீணாச்சு காலமும் உன் உடலின் நன்மை
அடக்கநிலை அறிவுக்கு அறிவேயாகும்
அதற்கு இடம் உள்ளது இரு புருவமையம்
தொடக்குருவால் அவ்விடத்தைத் தோன்றும் காட்சி
சுய அறிவால் உனையறியும் சாவியாகும்.
தேவை பழக்கம் அமைந்த சூழல் தன்மை
தெளிவடைந்து வரும் அறிவின் உயர்வுகேற்ப
நாவை மனதை செயலை பயன் படுத்தும்
நற் பண்பின் பலபடியில் மக்கள் உள்ளார்
சேவை செய்ய முன் வருவோர் சமுதாயத்தில்
தியாகம் விட்டு கொடுத்தல் பொறுமை அன்பு
யாவையும் தன இயல்பாய் பழகிக்கொண்டு
எவ்வுயிர்க்கும் கருணையோடு ஈகை செய்வோம்
பிழை போக்கித்தரம் உயர்த்தும் மனவளக்கலையை
பேருலகமெல்லாம் பெற்று நலம் காண
தழைத்த ஒரு நல்லெண்ணம் தக்கவலுப் பெற்று
தவப்பயிற்சி உடல்பயிற்சி தற்சோதனைகள்
பிழை நீக்கி முழு ஆயுள் பெறக் காயகல்பம்
பிள்ளைகளும் குடும்பமும் நற்பேறு பெற்று துய்க்க
அழைகின்றேன் உலகோர் அன்பின் பெருக்கத்தால்
அனைவருக்கும் பொது சொத்தாம் அறிவுக்கலை கொள்வீர்
எந்தஎந்த காலத்தோ இடம் காலம் தேவை
இவை ஒப்பத் தோன்றியன எத்தனையோ செயல்கள்
அந்த செயல் அக்கருத்து இன்று சிந்தனைக்கோ
அனுபவத்திலோ துன்பம் அளிக்குமெனில் தவிர்ப்போம்
அன்பர்களே வாரீர் அறிவின் இருப்பிடம் அறிந்து இன்பமுற
இன்பநிலையதை ஏக நிலையதை அன்பு நிலையதை
அறிந்திடலாம் இன்று
தின்று திரிந்துஉறங்கவோபிறந்தோம்
என்று நினைந்ததால் ஏனென உணர்ந்தோம்
அன்றாட வாழ்வை அறிந்துஅனுபவிக்க
இன்றனும்விரைந்துஎழிச்சிபெற்றுய்வீர்
பஞ்சமகா பாதகங்கள் செயதோறேனும்
பகுத்தறிவால் விளைவறிந்து எண்ணி எண்ணி
சஞ்சலத்தில் ஆழ்ந்துள்ளம் உருக்கத்தோடு
சன்மார்க்க நிலைக்காண துடித்து நின்றால்
அஞ்சாதீர் அன்புடனே உமையும் ஏற்போம்
அறிவு நிலை அறிவிப்போம் அமைதி காண்பீர்
துஞ்சாமலும் கூட நாடுவோருக்கு
துணைபுரிதல் எம் கடமையாக கொண்டோம்
தாய்ப்பறவை முட்டையிட்டு அவயம் காக்க
தனித்தனியே உருவடைந்து முழுமை பெற்று
சேய்ப்பறவை பூரணமாம் வரைக்கும் அந்த
அந்த சிருமுட்டை ஓட்டைவிட்டு நீங்கிடாது
நோய்பொருக்கா நிலையிலதை உடைத்துக்கொண்டு
நொடிப்பொழுதில் வெளியேறும் விந்தை காணீர்
தூய்நிலையார் அறிவறிந்து முழுமை பெற்றால்
துரிதமுடன் மதம் கடப்பார் உண்மை காணீர்
ஞானநிலை இல்லத்தில் வாழ்வோருக்கு
நல்லதல்ல கிட்டாது: வேண்டுவோருக்கு
கானகமே தகுதி: எனவும் கற்பித்த
கருதேற்ற காலமது மாறிப்போச்சு
மோனநிலையில் இருந்த இயற்கை ஒன்றே
முடிவாக மனித அறிவின் உயர்வில்
தானடைந்த பரினாமமே பிரபஞ்ச
தத்துவங்கள் என்றிந்தோர் பெருகி விட்டனர்
முன்னோர்கள் செய்த வினைப்பதிவு வித்தில் உண்டு
மூளையிலே உன்செயலின் பதிவனைத்தும் உண்டு
பின்னே நீ செய்வினைக்கு புலனைந்தும் இயக்கி
பெற்ற பழக்க பதிவு உண்டு இம்மூன்றும்
உன்னை நீ உள்ளுணரும் அகத்தவத்தை ஆற்றி
௦ஒவ்வொன்றாய்ப் பழிப்பதிவை அகற்றி வரவேண்டும்
தன்னில் பதிவான வினை பதிவுகளை மாற்ற
தணிக்க பொருள் செல்வாக்கு பயனாகது உணர்வீர்
அறிவென்ற தொட்டிலிலே உலகை ஏற்றி
அன்பூறும் சொற்களினால் வாழ்த்துப்பாடி
சிறியவரும் பெரியவரும் நேர்மையோடும்
சிந்தனையின் வளத்தோடும் அன்புகொண்டு
நெறியோடு வாழ்கவென அழுத்தமான
நினைவலைகளை பரப்பி தவம்செய்கின்றேன்
பொறிபுலங்களை ஒடுக்கி அருள் பூரிப்பால்
பொங்கிவரும் நல்வாழ்த்தால் உலகுய்யட்டும்
இன்பம் இன்பம்
பிறவியின் நோக்கத்தை அறிந்தபோதும்
பின் அந்த எல்லையினை அடைவதற்கு
அறநெறி விழிப்போடு பொறுப்புணர்ந்து
ஆற்றி மனம், செயல், தூய்மை ஆனபோதும்
உறவுகளின் உண்மை நிலை உணர்ந்து ஆற்றி
உயர்வான துறவுநிலை உணர்ந்தபோதும்
துறவுநிலை முடிவாக பெற்றபோதும்
துய்த்த பேரின்பம் எவ்வாறு உரைப்பேன்?
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேறாது
நித்தியமாம் மெய்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப் பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும்
உள் நுழையா இப்பேறு தவத்தாலன்றி
யார் பெறுவர் யார் தருவர்? அறிவு ஓங்கி
அதுவே தான் மெய்பொருள் என்றறியும்
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப் பற்றை
செதுக்கி கொண்டிருக்கும் விழிப்பு வேண்டும்
இன்ப ஊற்று என நிறைந்த இறைவா எனும் போதிலே
ஏற்படும் ஓர் இன்பமதை எவ்வாறு சொல்வேன் ?
நன்மை தரும் நவகோள்கள் நட்சத்திர கூட்டம்
நான் அகத்தே காணுகின்றேன் நடனமாடும் காட்சியாய்
உன் பெரிய பேரியக்க உவமையற்ற ஆற்றலால்
உலகங்கள் அத்தனையும் உருளுதே ஓர் கொத்துப்போல்
தன்மயமாய் தான் அதுவாய் தவறிடாது இயக்கும் உன்
தன்மையினை எண்ண எண்ண தவமது ஆனந்தமே.
மகரிஷி
உடலியக்கம் நின்றுவிட்ட சவத்தை மண்ணில்
உள்புதைத்து சமாதி என்று பூஜை செய்து
உடலியக்கம் பெற்ற பல பொருள் அழித்து
உள் அமைதியை இழந்து சேர்ந்தோரேனும்
உடலியக்கம் அறிவியக்கம் பிறப்பு இறப்பு
உண்மைகளரி ந்து பயன் அடைய வென்றால்
உடலியக்கம் நிற்கும் முன்னே கருத்தவத்தால்
உள்நாடி சமாதி நிலையறிய வாரீர் .
மகரிஷி ஞா. க.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Showing posts with label songs. Show all posts
Showing posts with label songs. Show all posts
Saturday, December 11, 2010
Wednesday, October 13, 2010
Few Lines
வந்ததுதான் போகுமேயல்லாது
வருமுன்னே இருந்த ஒன்று போவதுண்டோ?
இந்த உண்மை எண்ணி எண்ணி உணர்ந்து கொண்டால்
எவருக்கும் எப்போதும் நஷ்டமேது..
ஒன்றி புள்ளியாய் ஒடுங்கி நீ இரு,
அன்றி விரிந்திடில் ஆராய்ச்சியோடிரு,
நின்றிடு அகண்டாகார நிலையினில்
வென்றிடுவாய் புலன் ஐந்தையும் வெற்றியே
- தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி

Monday, July 06, 2009
குரு வணக்கம்
அண்டமதில் உருவெடுத்து அறிவைப்பெற்று
அவ்வறிவு ஒன்றுமுதல் அறதாகிப்
கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடி எண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கருத்துணர்த்திக் கனல்மூட்டிக் கருவாம் ஞானக்
குண்டலினி எனும் என் மெய்யுணர்வு எழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே!
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறியச் செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே.
அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்
-வேதாத்திரி மஹரிஷி
ஞானமும் வாழ்வும் (7)

Friday, August 17, 2007
அன்பும் கருணையுமாய்
அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்... -- குரு.வேதாத்திரி மகரிஷி.
Monday, July 30, 2007
மனிதனும் தெய்வமும்
இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.
அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம் அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில் பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம் படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம் வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும் பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன் பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.

Wednesday, December 20, 2006
ஞானக் களஞ்சியம்
தண்டனையில் நீதி வேண்டும்
----------------------------------------
கொலை செய்தான் ஒரு மூர்க்கன் அறிவிழந்து
கொலையுண்டான் நீதிபதி அளித்த தீர்ப்பால்
கொலைக்குக் கொலை நீதியென்றும் குற்றம்
செய்த கொடுமைக்கே தண்டனைகள் என்றும் சொன்னால்
கொலையுண்டோர் மனைவிமக்கள் பெற்றோர் செய்த
குற்றமென்ன? குடும்பத்தின் தலைவன் ஆங்கே
கொலையுண்ட நிகழ்சி அன்னார் வாழ்வில் என்றும்
கொடுந்துன்பம் தரவில்லையா? நீதி எங்கே?
குற்றங்கள் ஒழிய வழி
-----------------------------
சமுதாய அமைப்பினிலே உள்ள குறைபாடே
தனிமனிதன் குற்றங்கள் அனைத்திற்கும் மூலம்
சமுதாயம் தனியாரைத் தண்டித்து மேலும்
தவறிழைக்கும் செய்கையினை நீதியெனில் நன்றோ?
சமுதாய அமைப்புமுறை சீர்திருந்தி பொருட்கள்
சமத்துவமாய் அனைவருக்கும் கிட்டுமெனில் உலக
சமுதாயத்தில் குற்றம் நிகழ இடமேது?
தண்டனைக்கு எனவகுத்த சட்டங்கள் ஏனோ?
அருள் தொண்டு
--------------------
குற்றவாளி பாவியென்று யாருமில்லை உலகினில்
குறைகளுக்குக் காரணமோ பழைய சமுதாயம்
கற்றிடுவோம் புதிய கல்வி கருத்துயர்த்தி மேலாம்
கடமைகளைச் சிந்தித்து செயலாற்றி உய்வோம்:
உற்றசெல்வம், உடலுழைப்பு, அறிவு இவை கொண்டு
உலகுக்கு உதவியருள் தொண்டாற்றி மகிழ்வோம்.
மற்றவரை எதிர்பார்த்தல், கையேந்தல் வேண்டாம்
மா நிதியாம் இறைவனை நம் மனத்தடியில் தேர்வோம்.
-- யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி

எது தெய்வம்
திக்கெட்டிலும் திரிந்து
திகட்டா பேரின்பன்
அறிந்தவர்க்கு அழியா அரூபன்
அறியாதவர்க்கு அறிவித்த ரூபன்
பக்த்தியில் பரவி ஞான
முக்தியில் முடிவானவன்
மோனத்திலே முத்ர்பவன்
முதிர்ச்சியில் மோனமானவன்
அணுவிலே உயிரானவன்
உயிரே அவனானவன்
அவனே மாயையாகி
அதிலே அவனியாகி
அவனிக்குள் அவனாகி
அவனே அறிவாகி
அடைவதில் பேரின்பன் - என்றும்
அவனே பேரின்பன்
திகட்டா பேரின்பன்
அறிந்தவர்க்கு அழியா அரூபன்
அறியாதவர்க்கு அறிவித்த ரூபன்
பக்த்தியில் பரவி ஞான
முக்தியில் முடிவானவன்
மோனத்திலே முத்ர்பவன்
முதிர்ச்சியில் மோனமானவன்
அணுவிலே உயிரானவன்
உயிரே அவனானவன்
அவனே மாயையாகி
அதிலே அவனியாகி
அவனிக்குள் அவனாகி
அவனே அறிவாகி
அடைவதில் பேரின்பன் - என்றும்
அவனே பேரின்பன்
துரியாதீதம்
இறை நிலையோ டெண்ணத்தை கலக்கவிட்டு
ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க.
நிறை நிலையே தானாக உணர்வதாகும்.
நித்த நித்தம் உயிர் உடலில் இயங்கு மட்டும்
உறைந்து உறைந்திந்நிலையில் பழகிக் கொள்ள
உலக இன்பங்களிலே அளவு கிட்டும்
கரை நீங்கி அறிவு மெய்பொருளாய் நிற்கும்
கரைந்துபோம் தன்முனைப்பு காணும் தெய்வம்.
வேதாத்திரி பதிப்பகம்

Monday, December 18, 2006
சங்கற்பம் / வாழ்த்து
வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!
சங்கற்பம் / வாழ்த்து :
அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வேன்
உலக நல வேட்பு:
உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்.
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்.
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்.
ஐந்தொழுக்கப் பண்பாடு:
புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய், புகை ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்அதிகசுமை ஏதுமில்லை
1) அவரவர் தம் அறிவின் ஆற்றலினால்
உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2) மதிப்பிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா மாநெறியும்,
3) உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4) பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச்
சுதந்திரத்தை போற்றிக் காத்தும்,
5) பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.
இறை வணக்கம்:
எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ல்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீஅவனில்தான் நீ, உன்னில் அவன் அவன்யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அதுமுக்தி.
Be Blessed By the Divine!

பேரின்பக்களிப்பு
முன்னம் ஒரு துளியான மூலவிந்து நாதத்தால்
முழுமையாய் எனது உடல் முற்றறிவன் திருவருளால்
ஆட்சியின்றி ஆளுகின்ற அய்யன் திருவருளல்
அன்னைக்கருப்பை விடுத்து அடைந்து அடைந்துவிட்டேன்
மண்ணுலகை"உலகப்பொருள் உடலுக்கும் உண்மைப்பொருள் உயிருக்கும் உயர் கலைகள் அறிவிற்கும் ஒழுக்க நெறி வாழ்வதற்கும்
நலமளித்தல் நானுணர்ந்தேன் நடு நின்று வாழுகின்றேன்
நாடனைத்தும் ஊடுருவி நல்லறிவின் தொண்டாற்றி"
அருட்தந்தை

மோனத்தின் பெருமை
மோன நிலையின் பெருமை யார் எவர்க்கு
முன் படர்ந்து வாயாலே சொல்லக்கூடும்?
மோனமே அறிவினது அடித்தளம் ஆம்.
மிக விரிவு. எல்லையில்லை. காலமில்லை.
மோனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன் வினையும் பின் வினையும் நீக்கக்கற்கும்
மோன நிலை மறவாது கடமையாற்ற
மென்மை, இன்பம், நிறைவு, வெற்றி அமைதியுண்டாம்!
வேதாத்திரி மகரிஷி

குற்றம் என்பது என்ன?
எண்ணம், சொல், செயல்களைதன் விளைவைக்கொண்டு
எவருக்கோ, எப்போதோ துன்பம் நேர்ந்தால்
மண்ணுலகில் அத்தகைய செயல்கள் தம்மை
மதிக்கின்றோம் குற்றம் என்று அனுபவத்தால்
விண்ணறிவு அதிகரித்து, மக்கள் பெற்ற வசதிகளை
நன் முறையில் பயன்படுத்தி,உண்ண உடுக்க வாழ மனிதர்க்கெல்லாம் உரிமை சமமாக அமைத்தால் குற்றம் ஏது?

விழிப்பு வேண்டும்
நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா. நித்தியமாம்
மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி உணர்ச்சி
ஏதும் உள் நுழையா. இப்பேறு தவத்தால் அன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி.
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக் கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்

ஞானமும் வாழ்வும்
எவர் ஒருவர் குருவை மதித்து ஒழுகினாலும்
தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மை
தரத்தில் உயர்த்தி பிறவிப்பயனை நல்கும்!
மௌனத்தில் அறிவு தோய்ந்து பிறந்தால்
முன் வினையும் பின் வினையும் நீக்கக்கற்கும்!
உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல்
உயர் குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை இதையுணர
இருள் நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி இணைந்த பின்னே உணர்வது தான் மெய்ப்பொருள் உணர்வாம்.
இருள் நிலையை உணர்வதற்கும் பொருள்வடிவம் மனம் கொண்டால் எவ்வாறு பொருந்துமது எண்ணமின்றி மனம் ஒடுங்கி
இருளாகி பழகுவதற்கு ஏற்ற வழி உயிர் உணர்வே
இந்த மறை பொருள் உணர்த்த குரு அடி தொடர்வீர்....
எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றி தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மன வலுவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத்துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலை தாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மன நிறைவு உண்டாம்!
-- ஞானமும் வாழ்வும் கவி எண் 277

Friday, December 15, 2006
திருமூலர் திருமந்திரம்
வாழ்க வளமுடன்
நாம் நம் குருவின் திருவாயால் கேட்ட இந்த வரிகள்...
தெளிவு குருவின் திருமேனி காண்டல்
தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்
தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்
தெளிவு குரு உரு சிந்தித்தல் தானே!!!
அன்பும் கருணையுமாய் அகன்ற நிலையில் உள்ளாய்என் மனதை விரித்து இணைத்துக்கொண்டாய் உன்னுள்ளேகன்ம வினைகள் எல்லாம் கழிந்தன உணர்கின்றேன்.உன்னை உணர்ந்துய்ய உலகோர்க்கு தொண்டு செய்வேன்...

நம் குருனாதர்
உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...
Thursday, December 14, 2006
எப்பொருளை எச்செயலை எக்குணத்தைஎவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ற்றல்அறிவினிலும் உடலினிலும் மாற்றங்காணும்;இப்பெருமை இயல்பூக்க நியதியாகும்எவரொருவர் குருவை மதித்து ஒழுகினாலும்தப்பாது குருவுயர்வு மதிப்போர் தம்மைத்தரத்தில் உயர்த்திப் பிறவிப்பயனை நல்கும்
I like this above poem written by maharishi
I like this above poem written by maharishi
Subscribe to:
Posts (Atom)