வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, April 05, 2007

மனம் என்பது என்ன

நம் எண்ன அலைகளின் கூட்டுத் தொகுப்பே. அலை என்பது எண்ன ? நிலை அசைந்தால் அது அலை ! நிலை என்பது எண்ன ? சுத்த வெளி, அதாவது நம்மில் அறிவாக இயங்கும் அந்த சுத்த வெளி. இவ்வளவுதான் விளக்கம் - வேதாதிரியம் என்ன அழகாக ஆதி சங்கரருக்கு விளக்க உரை தருகின்றது பாருங்கள்.
இதில் இனிமை என்னவென்றால் CPS என்று சொல்லக் கூடிய மன அலைச் சுழல் அலகைக் கொண்டும் இந்த உண்மைகளை ஆராய்கின்றது வேதாதிரியம். உங்கள் மன அலைச் சுழல் 15 CPS என்று கொள்வோம். அப்பொழுது உங்களுக்கும் சுத்த வெளிக்கும் உள்ள தூரம் எவ்வளவு? 15 CPS அவ்வளவு தான் - ஏனென்றால் சுத்த வெளியை அறிவாக உணர 0 CPS வரை நீங்கள் செல்ல வேண்டும் . இது தான் இறை நிலைக்கும் உங்களுக்கும் இடையே உள்ள தூரம் வேதாதிரிய இறைப் பாதையில்.

சில சூத்திரங்கள்

1.இறை நிலை என்பது பேரறிவு.
2. இது பருப் பொருட்களில் பரிணாமம், இயல்ப்பூக்கம், செயல்-விளைவு என்ற விதங்களில் தன்னை வெளிப் படுத்துகின்றது .
3. பேரறிவு உயிரற்ற பொருட்களில் 1.pattern 2.precision 3.regularity என்ற மூன்றாக செயல் படுகின்றது .
4. பேரறிவு உயிரினங்களில் 1. Discrimination 2. Experience 3. Cognizance என்ற மூன்றாக செயல் படுகின்றது .
5. மனிதனில் பேரறிவு கரு மையம் என்ற செயலுக்கு ஏற்ற விளைவத் தரும் ஒரு அறிவு மையமாக தன்னை வெளிப் படுத்துகின்றது .


இந்த அறிவியல் விளக்கங்கள் தான் 'இந்த நூற்றாண்டின் தத்துவ ஞானி' தந்த அறிவு களஞ்சியங்கள் . இவை தான் வேதாதிரியத்தை 'logical spritual path' ஆக அடையாளம் காட்டுகின்றன .
இறைவனை அடையாளம் காண்பது வேதாதிரியத்தில் மிக எளிது என்பதை மகரிஷியின் வழி நின்றோர் அறிவார். அவரின் வழி நின்ற மனித மனங்கள் தம் வாழ்வில் உயரும் என்பது மட்டும் திண்ணம்.
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !

'அறிவே தான் நான்' என்பது எப்படி

ஏன் அறிவு இறைவன்?
இந்த பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களிலும் அறிவு அதன் தன்மையாய், இயக்கமாய் ஒளிந்து இருக்கின்றது.
ஒரு அணுவை எடுத்துக் கொள்வோம். proton ஐ மையத்திலும் electron ஐ வட்டப் பாதையிலும் வைத்து இருக்கும் அந்த அறிவு எது ? சூரியனை நடுவில் வைத்து கிரகங்களை அதைச் சுற்றி ஓட வைத்த அறிவு தான் எது ? 365 நாட்களுக்கு ஒரு முறை தவறாது சூரியனை வட்டம் அடிக்கும் அந்த பூமியின் அறிவு தான் என்னே ? தன்னைத் தானே சுழலும் வேகத்தை சனி கிழமைக்கும் புதன் கிழமைக்கும் ஒன்றாகவே வைத்திருக்கும் பூமியின் அறிவில் என்னே சீர்மை ?
ஆலமரத்திலிருந்து விழும் விதைகள் மிகச் சரியாக ஆலமரமாக அதே விழுது அமைப்புடன் மீண்டும் வருவது எந்த அறிவால் ? தன் சுழைகளை அடுக்கடுக்காக அழகாய் வைக்கும் ஆரஞ்சு பழத்தின் அறிவு தான் என்னே ? அமீபா மனிதனாய் வந்தது எந்த அறிவினால் ? தன் இதழ்களை தானே விரித்து அடுக்கடுக்காய் அவைகளை அடுக்கிக் கொள்ளும் தாமரையின் அறிவாய் விளங்குவது எது ? நாம் வாங்கும் சுவாச காற்றை உயிர் ஆற்ற லாக மாற்றும் அறிவு யார் ? உண்ணும் உணவை தானே செறித்து அடிப்படை ஆற்றல் துகள் ஆக பிரிக்கும் அந்த அறிவு எது ?
இதையெல்லாம் அறிவு என்று ஒப்புக்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்று கேட்டால் சிந்திக்கும் திறன் பெற்ற ஒரு நாத்திகரோ ஆத்திகரோ 'இல்லை' என்றே தான் பதில் சொல்வார்.
அவருக்கு ஆக்கினா தீட்சையும் துரிய தீட்சையும் தந்து மன அலை சுழலை குறைக்கும் யுக்தியில் திறன் பெறச் செய்தால் அவர் மனம் 'அந்த அறிவு தான் இறை நிலை - அதை விட மேலான ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை' என்ற நிலைக்கு சீக்கிரமே வந்து விடும். இந்த சூழலில் மட்டும் ஒருவர் 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொண்டால் போதுமானது. 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொள்ள தேவையான மனத்தையும் அறிவையும் பெற 1. தத்துவம் 2. யுக்தி என்ற இரண்டும் மிக முக்கியம். தத்துவம் , யுக்தி என்ற இரண்டுமே ஊற்றாய் பொங்கி வரும் இறை பாதையே வேதாதிரியம்.
இதை நாம் பெற்றது நம்மை பெற்றோர் செய்த முன் புண்ணியத்தால். அவர் தம் பதிவு தானே நம்மில் விளைந்து இன்று இப்படி ஒரு குருவின் காலடியில் நம்மை கிடத்தி இருக்கிறது...
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !

Wednesday, April 04, 2007

The Two-Fold Culture of Maharishi...

நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதுக்கும் துன்பம் தர மாட்டேன்... துன்பப்படும் உயிர்களுக்கு என்னால் முடிந்த உதவியை செய்வேன்... வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!