வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, April 05, 2007

'அறிவே தான் நான்' என்பது எப்படி

ஏன் அறிவு இறைவன்?
இந்த பிரபஞ்சத்தில் அனைத்து பொருட்களிலும் அறிவு அதன் தன்மையாய், இயக்கமாய் ஒளிந்து இருக்கின்றது.
ஒரு அணுவை எடுத்துக் கொள்வோம். proton ஐ மையத்திலும் electron ஐ வட்டப் பாதையிலும் வைத்து இருக்கும் அந்த அறிவு எது ? சூரியனை நடுவில் வைத்து கிரகங்களை அதைச் சுற்றி ஓட வைத்த அறிவு தான் எது ? 365 நாட்களுக்கு ஒரு முறை தவறாது சூரியனை வட்டம் அடிக்கும் அந்த பூமியின் அறிவு தான் என்னே ? தன்னைத் தானே சுழலும் வேகத்தை சனி கிழமைக்கும் புதன் கிழமைக்கும் ஒன்றாகவே வைத்திருக்கும் பூமியின் அறிவில் என்னே சீர்மை ?
ஆலமரத்திலிருந்து விழும் விதைகள் மிகச் சரியாக ஆலமரமாக அதே விழுது அமைப்புடன் மீண்டும் வருவது எந்த அறிவால் ? தன் சுழைகளை அடுக்கடுக்காக அழகாய் வைக்கும் ஆரஞ்சு பழத்தின் அறிவு தான் என்னே ? அமீபா மனிதனாய் வந்தது எந்த அறிவினால் ? தன் இதழ்களை தானே விரித்து அடுக்கடுக்காய் அவைகளை அடுக்கிக் கொள்ளும் தாமரையின் அறிவாய் விளங்குவது எது ? நாம் வாங்கும் சுவாச காற்றை உயிர் ஆற்ற லாக மாற்றும் அறிவு யார் ? உண்ணும் உணவை தானே செறித்து அடிப்படை ஆற்றல் துகள் ஆக பிரிக்கும் அந்த அறிவு எது ?
இதையெல்லாம் அறிவு என்று ஒப்புக்கொள்வதில் ஏதேனும் சிரமம் இருக்கிறதா என்று கேட்டால் சிந்திக்கும் திறன் பெற்ற ஒரு நாத்திகரோ ஆத்திகரோ 'இல்லை' என்றே தான் பதில் சொல்வார்.
அவருக்கு ஆக்கினா தீட்சையும் துரிய தீட்சையும் தந்து மன அலை சுழலை குறைக்கும் யுக்தியில் திறன் பெறச் செய்தால் அவர் மனம் 'அந்த அறிவு தான் இறை நிலை - அதை விட மேலான ஒன்று இந்த பிரபஞ்சத்தில் இல்லை' என்ற நிலைக்கு சீக்கிரமே வந்து விடும். இந்த சூழலில் மட்டும் ஒருவர் 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொண்டால் போதுமானது. 'அறிவே தெய்வம்' என்று ஒப்புக் கொள்ள தேவையான மனத்தையும் அறிவையும் பெற 1. தத்துவம் 2. யுக்தி என்ற இரண்டும் மிக முக்கியம். தத்துவம் , யுக்தி என்ற இரண்டுமே ஊற்றாய் பொங்கி வரும் இறை பாதையே வேதாதிரியம்.
இதை நாம் பெற்றது நம்மை பெற்றோர் செய்த முன் புண்ணியத்தால். அவர் தம் பதிவு தானே நம்மில் விளைந்து இன்று இப்படி ஒரு குருவின் காலடியில் நம்மை கிடத்தி இருக்கிறது...
வா ழ் க வை ய கம் ! வா ழ் க வ ள மு டன் !

No comments: