இருப்புநிலை இறைவெளியாம் ஈர்ப்பு ஆற்றலாகும்
இயக்கம் அதன் நுண்பகுதி எதிர்த்து தள்ளும் ஆற்றல்
கருப்பொருளாம் இவ்விரண்டும் காந்தம் என்ப தாச்சு
காணுகின்றோம் பேரியக்க களத்தில் உயிர்வகையில்
திருப்பொருளாய் இயங்கும் மனம் தேர்ந்து இறையுணர
தெய்வம் ஈர்ப்பு அறிவாயும் அதன் திணிவே அலையாய்
விருப்பு வெறுப்பு இன்பம் துன்பம் உணரும் மனம் அறிவோம்
வேண்டல் வளம் கண்டு வினை விளைவறிந்து வாழ்வோம்.
அஞ்சுவதேன் துணிந்து சொல்வோம் அறிவது நான் தெய்வம் அதுவேதான் வான்காந்தம் அகண்டமண்டலத்தில் பஞ்சமிலா விண்மையப் பகுதி இறை அறிவாம் படர்க்கைநிலை மனம் அது நாம் பகரும் சீவகாந்தம் வஞ்சமிலா சிவகாந்தம் வான் காந்தம் இரண்டே வாழ்உயிர்கள் வான்கோள்கள் வளம் ஒழுங்கு காக்கும் பஞ்சபுலன் கவர்ச்சியிலே பழகிக்கொண்ட மனிதன் பரவசமாய் இன்பமுறப் பாடினேன் இவ்வுண்மை.
No comments:
Post a Comment