1.இப்பாரில் பிறப்பெடுத்து இன்பமும் இன்னலுமுற்று அப்பாலுக் கப்பால் விளைந்த அருளமுதம் அறிவித்து செப்பாத் மேனிலைமேல் சிவமாக்கும் குருமேனி எப்பிறப்பில் காண்பேன் இனி.........
2. முந்தித் தவம் இருந்த புண்ணியம் இல்லாதிருந்தும் சிந்தைய்லே விந்தை விளைவித்து சாதித்தாய் ! அப்பா, அருட்குருவே, மெய்ஞான வள்ளலுனை எப்பிறப்பில் காண்பேன் இனி........
3. அறிவிற்கு இலக்கணம் அய்யனே நீ தந்தாய் அறிவை அறிவித்தாய் ; உறவை தெரிய வைத்தாய் புரிந்து, புரியவைத்து நீ பறந்து விட்டாயே ! எப்பிறப்பில் காண்பேன் இனி........
.4. விழலுக்கு நீரூற்றி வீணான வாழ்வியலை விழுமியத்துள் வளைத்து விளக்கேற்றி விளங்கவைத்து தொழுது வணங்குவதற்குள் தூரப்பற்ந்தாயே - உனை எப்பிறப்பில் காண்பேன் இனி.....
5. தந்த தவத்திற்கு ஈடு இணை ஏதுமுண்டோ ? இந்தப் பிறவிய்லே ஈடேற வழியுண்டோ ? வந்தப் பணிமுடிந்து வான்வழிக்கு சென்றாயே எப்பிறப்பில் காண்பேன் இனி.......
6. விஞ்ஞானம் விளைவித்த விளங்காத பக்கங்கள் - உன் மெய்ஞான விளக்கத்தில் மெய்சிலிர்த்த அனுபவங்கள் ஒவ்வாத குணம் நீக்கி அகதீபம் ஏற்றினையே....! எப்பிறப்பில் காண்பேன் இனி.........
7. பருமேனி பார்த்தபின்னும் மாறாமல் மறந்து விட்டேன் திருமேனி தெளிந்தபின்னும் தேராமல் இழந்து விட்டேன் முப்பாழ் விளங்கி முழுமை பெற தவழ்கின்றேன் எப்பிறப்பில் காண்பேன் இனி......
8. அழுது புலம்புதற்கு திருவடிகள் தெரியலையே......1 பழுதாகி வந்த வினை விடுதலைக்கு வழிய்லையே......! இப்பிறவி நீந்திப்பதம் அடைய வரம் வேண்டும் - அப்பா உணை எப்பிறப்பில் காண்பேன் இனி......
வாழ்க வளமுடன் சீனி. இளங்கோவன் சென்னை குயப்பேட்டை ஆன்மீக அறிவாலயம். சென்னை 600012
No comments:
Post a Comment