வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Wednesday, March 21, 2007
அறிவியல் மனம் பற்றி என்ன சொல்லுகின்றது என்று பார்ப்போம்
பொதுவாக எல்லா விதமான அறிவியல் ஆராய்ச்சியாளர்களாலும் ஒப்புக் கொள்ளப் படும் கருத்து இது ஒன்று தான் : 'மனம் என்பது மூளையின் இயக்க நிலை ' . Beyond this, any definition towards reality is always debated. அறிவியல் இதற்கு மேல் வர மாட்டேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் சுவாமீஜியோ இங்கே தான் தான் மனம் பற்றிய வரையறையை துவக்குகின்றார்... and he reaches greater heights in his simpler words !நாமும் இதை சற்று ஆராய்ந்து பார்க்கலாம் . சுவாமிஜியின் காந்த தத்துவத்த்திற்கு வருவோம்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளுங்கள் இப்பொழுது அந்த கிண்ணத்துக்கு க்கு என்ன பெயர்?தண்ணீர் கிண்ணம்.அதே கிண்ணத்தில் எண்ணை இருந்தால்?எண்ணை கிண்ணம்.அப்பொழுது ஒரு களத்தில் நாம் எண்ணங்கள் எல்லாம் இருந்தால்? அந்த களத்துக்கு என்ன பெயர்?எண்ணக் களம் .அப்பொழுது நாம் ஜீவ காந்த களம் முழுவதுமே எண்ணங்கள் / எண்ன அலைகள் இருந்தால்? அதை எப்படி அழைப்பது?எண்ணக் களம் என்று தான் அழைக்க வேண்டும் . இந்த ' எண்ணக் களம் ' என்ற தமிழ் சொல்லுக்கு synonym (மறு பெயர்) தான் ' மனம் ' . இப்படி தான் சுவாமிஜி ஜீவ காந்த களத்துக்கு மனம் என்று ஒரு பெயர் வைக்கிறார்கள்.சரி , அறிவியல் அறிஞர்கள் மூளை பகுதியிலேயே தான் ஆராய்ச்சியை ' பார்க் ' பண்ணி வைத்து விட்டார்களே ? கவலை படவேண்டாம் ... இருக்கவே இருக்கின்றது நாம் vethan - yogon theory. அதைக் கொண்டு விளக்கி விடலாம் !மூளை இயங்கினால் மனம் என்று ஒப்புக்கொள்கின்றார்கள் அல்லவா? மூளையின் இயக்கம் என்பது என்ன ? மூளை ஏதால் ஆக்கப்பட்டது? மூளை என்பதும் ஒரு அணு கூட்டமே! காந்தம் இல்லாத அணு உண்டா பிராபண்சததில் ? மூளை செல்களில் இருந்து காந்த அலைகள் வெளியே வந்து கொண்டே தான் இருக்கும்.இந்த காந்த அலைகள் தான் என்ன ?எண்ணங்கள் ... "Thoughts are the waves sent by brain cells " - இதை அறிவியல் மறுப்பதில்லை.இந்த இடத்தில் நாம் ஒரு எளிய எடுத்துக்காட்டை பார்க்கலாம்.காவேரி எங்கு உற்பத்தியாகின்றது?குடகு மலையில்.எங்கெல்லாம் பாய்கின்றது?பல மாநிலங்களில்.பாயும் எல்லா மாநிலங்களிலும் காவேரி என்று தானே அழைக்கப்படுகின்றது?ஆம்.மனம் எங்கு உற்பத்தியாகின்றது?மூளை செல்களில்.எங்கெல்லாம் பாய்ந்து பரவுகின்றது?நமது ஜீவ காந்த களம் முழுவதுமே.அப்பொழுது நாம் ஜீவ காந்த களத்தை எப்படி அழைக்க வேண்டும் ?மனம் என்று தானே அழைக்க வேண்டும் ... அப்படி தான் நாமும் அழைத்துக்கொண்டு உள்ளோம்...இது தான் நம் மனம் பற்றிய வேதததிரிய அறிவியல் கண்டுபிடிப்பு ... சுவாமிஜியின் உள்ளறிவு...அறிவியல் ஒரு நாள் வேததாதிரிய அறிவியலை எட்டிப் பிடிக்கும் என்று நம்புவோம், வாழ்த்துவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment