வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Wednesday, March 21, 2007
இறை நிலையை நாம் ஏன் இறை நிலை என்று கருத வேண்டும் ?
கீதையில் 'மிக ரகசியமான ஞானம்' என்ற ஒரு தலைப்பில் இந்தக் கருத்து செய்யுள்களில் வருகின்றது."நான் [சுத்த வெளி] உங்களுக்குள்ளாகவும் புறமாகவும் இருப்பினும், உங்களை உருவாக்கியவனாகவும் உள்ளடக்கியவனாகவும் இருப்பினும், நான் உங்களுக்கெல்லாம் மேலே தனித்து இருக்கிறேன் [சிவ களமாக]."சுத்த வெளியை இறைவன் என்றும் அதுவே சிவ களம் என்றும் தன் பாடல்களில் புதைத்த வியாசர்-இன் மூளையை எப்படிப் புகழ்வது ? வேததாதிரி மகரிஷியின் அறிவியலை கொண்டு தான் ! நமக்கு தெரிந்த ஒரே தெளிவான சுத்த வெளி தத்துவம் மகரிஷி கொடுத்தது தானே?இந்த எண்ன ஓட்டங்களில் தான் வேதாதிரி ஒரு முத்திரை பதித்து விடுகின்றார். அது என்னவென்றால் 1.சுத்த வெளியை ஏன் இறை நிலை ஏன் கருத வேண்டும் ? 2.சுத்த வெளி எப்படி பொருளாக வந்தது ? என்ற இந்த இரண்டு புதிர்ககளுக்கும் விடை அளிக்கும் ஒரே மஹான் என்ற உயரிய நிலையை அவர் அடைந்து விடுகின்றார்.முதல் கேள்வியின் விடையை ஆய்வதே இந்த மடலின் உட்கருத்து.1. ஒரு பொருள் இந்த பிரபஞ்சம் முழுவதிலும் உள்ள இயக்கங்களின் அடிப்படை அறிவு என்று கொள்வோம். பூமி சரியாய் சுழன்று ஓடி இயங்குவதும் இந்த அறிவுடைய பொருளால் தான் , நீங்கள் சரியாய் மூச்சு விடுவதும் இந்த பொருள் அறிவாய் இயங்குவதால் தான் .2.எல்லா இயக்கங்களும் அதிலிருந்தே வந்தன என்றும் கொள்வோம். நீங்கள் இருப்பது இந்த பொருளால் தான் நீங்கள் இருக்கும் இந்த பூமி இருப்பதும் இந்த பொருளால் தான் .3.எல்லா இயக்கங்களும் அதனுள்ளேயே நிகழ்கின்றன என்றும் கொள்வோம். நீங்களும் அதற்குள் தான் , பல கோடி மைல்கள் தள்ளி இருக்கும் நட்சத்திரமும் அதற்குள் தான் .இப்பொழுது, அந்த பொருளை இறை நிலை என்று கொள்ளலாம் அல்லவா?இப்படித் தான் வியாசர் தன் நிலை விளக்கம் பெறுகின்றார் வேததாதிரியத்தில் . வியாசர் தன்னை சரி என்று நிரூபிக்க எத்தனை எத்தனை நூற்றாண்டு காத்திருக்க வேண்டியத்தாய் இருந்திருக்கிறது.இதில் ஒரு சூத்திரம் மலர்கின்றது நம் நவீன சிததரின் மனதில்:"இறை நிலை என்பது1. வற்றா இருப்பு2. பேறாற்ரல்3. பேரறிவு4. காலம்என்ற நான்கின் இணைப்பு - இந்த நான்கும் இணைந்ததால் சுத்த வெளியை நாம் இறைவன் என்று கொள்கின்றோம்." என்பது தான் அது .சூத்திரம் புரிந்து அதை நோக்கி மனத்தை குவித்து , இறை நிலை அடைய முயற்சி செய்வோமா ?மேலும், இந்த சூத்திரம் தந்த சுவாமிஜி 'இந்த நூற்றாண்டின் இறை நிலை அறிவியல் தந்த மஹான்' அல்லவா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment