வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, July 24, 2007

குரு தானாக வருவார்

நாம் அறிவு வளர்ச்சி பெற்று சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பு கிடைக்கின்றவரையிலே இந்த ஐந்து புலன்களிலேயே இயங்கி நாம் எதைப் பார்க்கின்றோமோ அதனுடைய பதிவு அதிலே ஏற்படக்கூடிய இன்ப துன்பப் பதிவுகளை ஏற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆகையினால் அந்த மெய்ப்பொருளாக உள்ள ஆதி நிலையானது அறிவுக்குப் பிடிபடவில்லை. நாம் எங்கேயிருந்து வந்தோம், எதற்காகப் பிறந்திருக்கிறோம், எங்கே போக வேண்டும் என்பது நினைவுக்கே வரவில்லை. சூதாட்டத்தில் இறங்கிவிட்ட ஒருவனுக்கு, அந்த மயக்கத்திலே செயல்பட்டுக்கொண்டு இருக்கக்கூடிய ஒருவனுக்கு, எப்படிக் குடும்பத்தைப் பற்றியோ லாப நஷ்டத்தைப் பற்றியோ எண்ணம் வராதோ, அதுபோல இந்த இன்ப துன்பம் என்ற ஒரு சூதாட்டத்திலே நம்மைப் பற்றியே நினைப்பே எழுவதில்லை. இந்த இடத்திலேதான் குருவினுடைய பார்வை, குருவினுடைய நினைவு, குருவினுடைய சொல் ஒரு மனிதனுக்குத் தேவையாக இருக்கிறது. இங்கே ஒரு கேள்வி ? குரு என்றால் யார் ? குரு என்றால் அவர் தன்னை அறிந்தவர். அவருடைய உதவி இவனுக்குக் கிடைப்பதற்கு இங்கே அவன் ஒரு நிமிடமாகிலும் சிந்தித்திருக்க வேண்டும், தேடி இருக்க வேண்டும். நான் பிறந்து வந்துள்ளேனே, என்னைப் பற்றி எதுவுமே தெரியவில்லையே, தெரிந்து கொள்ள வேண்டும், என்று இவனாக நினைத்திருந்தாலும் சரி, அல்லது இவனுடைய பெற்றோர்கள் நினைத்து இருந்தாலும் சரி, அந்த எண்ணம் நிறைவேறாமல் தொடர்ந்து வந்து இருந்தாலும் சரி அது கட்டாயம் அதற்குரிய ஒரு குருவைத் தேடிக்கொடுத்துவிடும். வெளியிலே இருந்து வந்த ஒரு உருவத்தை குரு என்று சொல்வதைவிட, ஒரு மனிதனுடைய கர்மா, அவனுடைய செயல், அவனுடைய சிந்தனை, அவனுடைய தெளிவு, அவனுடைய அறிவு வேகம் அவனுக்கு உயர்வு நாட்டத்தை கொடுத்துவிடும் காலத்தாலே. அதுவே குருவையும் கொண்டுவந்து கொடுத்துவிடும் காலத்தாலே. அந்த குருவினுடைய பார்வை, சொல் இவைகள் எல்லாம் சாதகனுடைய உள்ளுணர்வைத் துõண்டிவிடுகிறது.

2 comments:

Vijay Radhakrishnan said...

Vaazhga Vazhamudan

I have been reading your Spiritual blogspot and its quite impressive with profound understanding of spirituality and Guru Bhakti. I am keen to have information on Maharishi's Life right from his birthhood to the moment he breathed last ; when did he actually recieve the Jnana Upadesa , his married life ; The time he attained JivanMukti ; when was he bestowed with Maharishi Hood etc..Also Anboli magazine , the Jnana Kalanjiam could be made available online.

It could be a great spiritual service if you could do the same

Santhosham

"Blessings to all spiritual seekers for attaining Jnana Siddhi on Guru Poornima"

Vedha said...

you can get his life histroy online.

www.vethathiri.org