அண்டமதில் உருவெடுத்து அறிவைப்பெற்று
அவ்வறிவு ஒன்றுமுதல் அறதாகிப்
கொண்ட மேலாம் இவ்வுருவில் குறிப்பில்லாமல்
கோடான கோடி எண்ணி அனுபவித்துக்
கண்டபலன் எனையறிய நினைந்தேனப்போ
கருத்துணர்த்திக் கனல்மூட்டிக் கருவாம் ஞானக்
குண்டலினி எனும் என் மெய்யுணர்வு எழுப்பிக்
குறித்து எனையறிவித்த குருவே அன்பே!
சிந்தையை யடக்கியே சும்மா விருக்கின்ற
சீரறியச் செய்த குருவே!
அந்தநிலை தனிலறிவு அசைவற்றிருக்கப்பெரும்
ஆனந்தம் பொங்குதங்கே!
இந்தப்பெரும் உலகமிசை எடுத்த பல பிறவிகளின்
இறுதிப் பயனாகிய
சந்ததமும் எனைமறவாத சாந்தவாழ்வளித்தோய் என்
சந்தோஷச் செய்தி இதுவே.
அறிவேதான் தெய்வமென்றார் தாயுமானார்
அகத்ததுதான் மெய்ப்பொருள் என்றெடுத்துக்காட்டி
அறிவதனை அறிவித்தார் திருவள்ளுவர்
அவ்வறிவை அறிவதற்கு முறைகள் சொன்னார்
அறிஞர் திருமூலர் அவ்வறிவில் ஆழ்ந்து
ஆனந்தக் கவியாத்தார் இராமலிங்கர்
அறிவில் அறிவாய் நிலைத்து அறம்வகுத்தோர்
அதை வாழ்ந்து காட்டினோர்நினைவு கூர்வோம்
-வேதாத்திரி மஹரிஷி
ஞானமும் வாழ்வும் (7)
No comments:
Post a Comment