வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Thursday, May 31, 2007
குரு சீடர் உறவு--குரு என்ற தாய்மை!
வாழ்க வளமுடன்அருட்பேராற்றல் இரவும் பகலும் எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் உறுதுணையாகவும் பாதுகாப்பாகவும் வழி நடத்துவதாகவும் அமையுமாக! வாழ்க வளமுடன்!எங்கும் நிறைவாக இருக்கும் நிலையான இறை நிலையுடன் எப்போதும் உறைந்திருக்கும் குருவின் பாதத்தில் சரணடைதலை சமர்ப்பிக்கிறேன்.இந்த உலகம் நிறைவாக நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்று எப்படி அறிவது?உலகமென்பது நமக்கு நம் மனதில் இருந்து தான் ஆரம்பிக்கிறது.எல்லாமே நிறைவாக இருக்கிறதா? என்று நமக்கு என்றும் ஒரு கேள்வி எழவே செய்கிறது! இதற்கு காரணம் ஆராய்கையில் நமது மனதில் இருக்கும் அசைவுதான் முதலாக இருக்கிறது! இந்த உலகம் நிறைவாக இருக்கிறதா? என்பது நாம் நிறைவாக இருக்கிறோமா? என்றைய கேள்வியின் மறு முனை! நாம் முதலில் நிறைவாக இருக்கிறோமா என்று நாம் அறிய வேண்டும்! எல்லாம் நிறைவாக இருக்க வேண்டும் எனில் நாம் என்ன செய்ய வேண்டும்? நிறைவான நிலையுடன் இணைய வேண்டும்! நிறைவாக விளங்கும் குருனாதரிடம் சரணடைய வேண்டும்! எல்லாம் நிறைவாகவே தான் இருக்கிறது என்ற அமைதியானது நமக்கு உணர்வாக வேண்டும்! நமது மனமானது எதனை நோக்கி இருக்கிறது என்ற புரிந்து கொள்ளல் நமக்கு அவசியம் வேண்டும்! குருனாதரின் மலரடியான இறைனிலையில் நாம் லயித்தாக வேண்டும்! நாம் ஒவ்வொருவரும் அவரவர் அளவில் சரியாக இருக்கிறோம்! ஆனால் அனைவரின் ஆற்றலுக்கும் அனைத்துக்கும் மூலமான இறைனிலை என்ற சரியான வழியில் நாம் இருக்கிறோமா என்று நாம் ஆராய வேண்டும்! நமக்கு மட்டும் நாம் சரியாக இல்லாமல், நமது மனதிற்கு மூலமான இறைனிலையோடு இணைந்து, நம்மை நாம் ஆராய்கையில் நமக்கு எந்த தவறும் எந்த குழப்பமும் இல்லாத நிலையை அடைந்திருப்போம்! அந்த நிலையில் மனமானது, நமக்கு நிகழும் எதற்க்கும் காரணம் செயல் விளைவு என்றாகிய தெய்வ திருச்சட்டம் தான் என்று புரிந்து அமைதியை அடைந்து இருக்கும்! "என் வாழ்வில் எனக்கு அமைதியே இல்லை" என்று நிற்கின்ற அனைவருக்கும் இறைவனின் திருச்சட்டமாகிய செயல் விளைவை ஏற்றுக்கொள்ளும் நிலை வந்து விடும்! எதையும் ஏற்றுக்கொள்ளும் நிலை வந்தால் நமக்கு என்றும் அமைதி தான்! எப்படி எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருக்கிறது? அது தான் நிறைவு! " நிறைவு" என்பதை சொல்வது யார்? எது? ஏன்? நிறைவு என்பதை உணர்வது ஆறாவது அறிவாகிய "மனது". நிறைவு என்பது மனதின் மூலமாகிய அந்த "பேரறிவு"! இறைவன் என்றதும் நாம் உணர வேண்டியதை வார்த்தையாகச்சொன்னால் அது தான் " நிறைவு" ! ஏன் எனில் நிறைவு தான் எப்போதும் இருக்கிறது! இந்த உலகம் சரியாகத்தான் போகும்! நிறைவின்றி வேறு ஏது இறை நிலையின் தன்மையாக நமக்கு சொல்வதற்க்கு இருக்கும்? எண்ணற்ற விசயங்கள் இதற்க்கு எதிராக இருக்கிறது! முதலில் இந்த சமுதாயம், இந்த உலகம் அமைதியாக இல்லை. சுற்றி இருக்கும் எதுவும் சரியாக இல்லை என்ற நிலை நமக்கு முன்! ஆனால்....இதை எல்லாம் நமக்கு சொல்லும் மனதானது, நடப்பதை செயல் விளைவாக ஏற்காத தன்மையுடன் இருக்கிறது! இதை நாம் தன்முனைப்பு என்றும் சொல்லலாம்! ஆனால் மறைவாக இருக்கும் உண்மை எதுவெனில், ஏற்றுக்கொள்ளாத நிலை என்பது "சரணடையாத" நிலை! சரணடைதல் என்பது, எதையும் ஏற்கிற தன்மை தான்! எதையும் மனதால் நாம் எதிர்க்கும் வரை தான் அது நம் முன் நிற்கும்! நிறைவான இறை நிலையுடன் நாம் நிறைந்து நிற்கும் பழக்கம் பெற்றால் நமக்கு எதிலும் என்ன செய்ய வேண்டும் என்ற பொறுப்பு வந்து விடும்! அந்த சரணடைதலுக்குத்தான் நமக்கு " குரு" என்ற தாய்மை தேவைப்படுகிறது! தாயிடம் தஞ்சம் புகும் பிள்ளைக்கு எப்படி தேவையானதை தருகிறாளோ, அது போலத்தான் குருவின் கருணையும்! குருவின் முன் " உள்ள " சரணாகதி தான் நமக்கு எல்லாவற்றையும் உணர வைக்கும்! "உள்ள" சரணாகதி எல்லாவற்றையும் தரும் என்றால் எதிர்ப்பார்ப்பு ஆகிவிடாதா?........என்றால் இல்லை என்று தான் சொல்ல முடியும்! குருவானவரின் முன் நிற்கின்ற சீடனுக்குத்தான், செயல் விளைவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் இறைவன் எல்லாவற்றையும் முறையாக நடத்துகிறான் என்ற உணர்வு மிஞ்சி நிற்கிறது! அந்த பாக்கியம் பெறும் சீடன் எப்போதும், தாயின் மடியில் தலையை சாய்த்து ஆனந்தம் பெறுகிறான்! இறை நிலையின் தன்மையாய் தான் எந்த நிகழ்வும் நடக்கிறது என்ற தன்மை நமக்கு வரவேண்டும்! இறை நிலையை தாண்டி எதுவும் நிகழ வாய்ப்பில்லை! இயற்கைக்குள் எல்லாம் அடங்கிப்போகும்! இயற்கையைத்தாண்டி எதுவும் நிகழாத வகையில் இயற்கை சக்தியுடன் எல்லாவற்றையும் நிகழ்த்துகிறது! எல்லாம் சரியாக நிறைவாகவே இருக்கிறது என்ற பேருண்மையை நாம் உணர இறை நிலை தவத்தில் குருவின் ஆனந்தத்தில் உறைய வேண்டும்! குரு என்ற தாய்மையிடம் நாம் முழுவதுமாக சரணடைவோம்! தாயிடம் சரணடைந்த எண்ணற்ற புதல்வர்களில் நாமும் ஒருவராக மாறுவோம்! தன் செயல் எண்ணி தவிப்பது தீர்ந்திங்கு நின் செயல் செய்து நிறைவும் பெறும் வண்ணம் நின்னை சரணடைந்தேன்!என்ற பாரதியின் வரியாய் நம் தாயிடம் சரணடைவோம்!வாழ்க வளமுடன்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment