வாழ்க வளமுடன்.அன்பு என்பது உணரப்படுவது மட்டுமில்லாது செயலில் வருவது இறை தவத்தில் தான்!"பாசமாம் பற்றறுத்து என்னை பாரிக்கும் ஆரியனே" என்று திருவாசகத்தில் மாணிக்க வாசகர் பாடுகிறார்! மனது கொண்டுள்ள எல்லா பற்றுக்களில் இருந்து மனதை விடுவிக்கும் போது மனது என்பது எளிதாக இறைனிலையில் நுழைகிறது! எதுவும் இன்றி எல்லாமாகி விரிந்து இருக்கும் நிலை தானே இறை நிலை!"அன்பே சிவம்" என்ற திருமூலரின் வாக்கு மிக உண்மை!
ஈசன் அறியும் இராப்பகலும் தன்னை
பாசத்துள் வைத்து பரிவு செய்வார்களை
!தேசுற்றறிந்து செயலற்று இருந்திடில்
ஈசன் வந்தெம்மிடை ஈண்டி நின்றானே!
இப்படி பார்க்கும் போது ஈசன் மீது கொண்டுள்ள பாசம் மட்டும் தான் மனித சமுதாயத்திற்க்கு தேவை!அது மட்டும் தான் அன்பை உணர உதவும்! நம்முடைய பெற்றோர் மட்டும் குடும்பத்தின் மீதான பாசம் என்பது பற்று தான்! அதை வைத்துக்கொண்டு நாம் இறைவனை உணர முடியாது! நம் குருனாதர் சொன்ன மாதிரி " நித்தியமாம் மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம் ஊர் உலக பொருள் கவர்ச்சி உணர்ச்சி ஏதும் நுழையா! இப்பேறு தவத்தால் அன்றி யார் பெறுவார் யார் தருவார்? " வாழ்க வளமுடன்.
No comments:
Post a Comment