வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Tuesday, May 29, 2007
comparision of WCSC
வாழ்க வளமுடன். நம்முடைய மனவளக்கலை மன்றம் ஒரு மிகச்சிறந்த முறை. ஏனெனில் ஒரு விதத்திலும் அறிவிற்க்குப்புறம்பான செயல்களில் ஈடுபடாமல் ஆன்மாவை பேரறிவோடு இணைக்க உதவுகிறது. ஒவ்வோர் மகான் வாழ்ந்த போது அவரவர் சுற்றத்தாரின் மன நிலைக்கு ஏற்ப அந்த மகான்களின் உபதேசம் இருப்பதைக் காணலாம்! இது சமுதாயத்தோடு இணைந்து அவர்களை தங்களின் வழிக்கு திருப்பி விடுவது தான் குருவின் நோக்கமாக இருந்தது. ஆனால் வள்ளலார், ரமண மகரிஷி மற்றும் குரு வேதாத்திரி மகரிஷி போன்ற மகான்கள் எல்லாம் எந்த விதத்திலும் உண்மையின் நிலையில் இருந்து கீழே இறங்கி வந்ததில்லை! மௌனம் என்றும் அத்வைதம் என்றும் அசையாமல் அறிவை பேரறிவில் இணைத்து இந்த மகான்கள் சமுதாயத்தில் இருந்து கொண்டே தான் இருந்தார்கள்! மற்ற ஆன்மீக மார்க்கங்கள் எல்லாம் செல்ல வேண்டிய கடைசி வழியை நமக்கு நேரடியாக தந்தது ஒரு வகையில் ஒரு பாக்கியம் என்றாலும், அதை பெறும் தகுதி என்பது எல்லோருக்கும் இருக்க வில்லை! இதனால் தான் வள்ளல் பெருமான் " கடை விரித்தேன் கொள்வாரில்லை" என்றார்கள். ரமண மகரிஷி அவர்களிடம் நீங்கள் ஏன் எப்போதும் அத்வைத நோக்கிலேயே உங்கள் பதிலை சொல்கிறீர்கள் என்று கேட்ட போது, " என்ன செய்வேன், என் புத்தி இருக்கும் இடத்தைப் பொறுத்துத்தானே என்னால் பேச முடியும்! " என்றாராம். நம் குரு நாதரோ, " இறைவெளியோடு எண்ணத்தை கலக்கவிட்டு ஏற்படும் ஓர் அமைதியிலே விழிப்பாய் நிற்க்க நிறை நிலையே தானாக உணர்வதாகும் " என்றார். இது தான் சமுதாய்த்திற்க்கு இறை நிலை காட்டும் கருணை நிலை! நம் குருனாதரின் கருணை நிலையே தான் நமக்கு நிறைய கவிகளும் தத்துவங்களும் கிடைத்திருக்கின்றன. இவை எல்லாம் புரிந்து கொள்ளும் போது சமுதாயம் அமைதியை பற்றி விடும்! ஆனால் நமது மன்றத்திலோ, வள்ளலார் மற்றும் ரமண மகரிஷி அவர்களின் ஆன்மீக நிலையத்திலோ மக்கள் கூட்டம் அதிகமாக இல்லாததற்க்குக் காரணம் குரு நாதர்கள் எல்லாம் பேரறிவில் இருந்து விலகி நில்லாமல் இருந்தது தான் என்று தோன்றுகிறது! இறை நிலையானது, எதை நிகழ்த்துகிறதோ அதாவது நம்மை சுற்றி எது நடக்கிறதோ அது தான் இறைவன் இயற்கையாக இருந்து நடத்துகிறான் என்று ஏற்கும் தன்மை நமக்கு வர வேண்டும். இயேசு நாதர் தனக்கு நிகழ்வதை ஏற்றுக்கொண்டதைப்போல நம்மை சுற்றி நிகழ்வதை ஏற்கும் தன்மை என்பது, இயற்கையோடு ஒத்து வாழும் தன்மை... நமக்கு கிடைக்கும்! இது கோழைத்தனம் அல்ல! இது எதையும் சந்திக்கும் திறன்! அது நமக்கு அவசியம் வேண்டும்! காலம் தானாக நம் முயற்சிக்கு சரியான பலனைத்தரும்! வாழ்க வளமுடன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment