வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
Thursday, May 31, 2007
பிரம்மச்சரியமும் ஞானமும்
எப்போதும், ஆண் - பெண் உடலிணைப்பே இல்லாமல் வாழ்வது பிரம்மச்சரியம் என்று தவறாகக் கருதப்படுகிறது. இந்த வைராக்யம் கொண்டவர்கள் மிகவும் உயர்வடைய முடியும் என்ற நம்பிக்கையும் பலரிடம் இருக்கிறது. இவ்வாறு நீங்கள் கருத வேண்டாம் என்று உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். உலகமீது உருவாகி வாழ்ந்தவர்கள், வாழ்பவர்கள் அனைவரும் இந்த விரதம் கெட்டபோது தான் உற்பத்தியானார்கள் என்பதை ஞாபகப்படுத்துகிறேன். உலக உத்தமர்கள், ஞானிகள், தீர்க்க தரிசிகள், அனைவரும் பிரம்மச்சரியம் கெட்டவிடத்தில் தான் தோன்றினார்கள்; ஆண் - பெண் நட்புடன் ஒழுக்கத்துடன், வாழ்ந்தார்கள், வாழ்ந்து வருகின்றார்கள் என்று உதாரணம் காட்டுகிறேன். வயது வரும் வரையில் கட்டுப்பாடாக இருந்து, பின்னர் ஒழுக்கத்துடன் திருமணம் செய்து கொண்டு, அளவு முறையுடன் உடல் கலப்புக் கொண்டு வாழ்வதையே நல்ல கொள்கையாகக் கொள்ள வேண்டும் என்று எடுத்துக் காட்டுகிறேன்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
வாழ்க வளமுடன்
ஞானியர்கள் பிரம்மச்சரியம் கெட்டதால் தோன்றினார்கள் என்பது சரியான ஞான கருத்து ஆகா.
ஞானியர்கள் தோன்றுவதர்க்கு கணவன் மனைவி தர்மத்திற்காக புணரும் பொழுது மட்டுமே
கருவில் இறங்குவார்கள் . தர்மதிற்காக கொள்ளும் உடலுறவில் பிரம்மச்சரியம் கெடாது.
இன்பத்திற்காக , உயிர் ஆற்றல் , உயிர் மையத்தில் இருந்து ,
அறிவு (எண்ணம்) மனம்(சொல்) உடல் (செயல்) என்ற நிலைகளில்
வெளிபடும் பொழுது பிரம்மச்சரியம் கலையும்.
சத்திய யகத்தில் மஹான் களும் , மஹ ரிஷிகளும் இல்லற்த்தில் வாழ்ந்த போது , தங்களுடைய
துனைவியை (Saha Dharma Saarini ) சஹ தர்ம சாரினியாக , அன்னையாக போற்றினார்கள்
இல்லற தர்மத்திற்காக மட்டும் தன்னிலை அடைந்த போது அருட்குழந்தைகளை தவத்தில்
இருந்து பெற்றார்கள்.
திருமணத்திருக்கு பிறகு அளவாக உடல் இன்பம் கொள்வதால் ஞானம் நிச்சியம் தடை பெரும்
காமம் என்பது குண்டலினி கீழ் நோக்குதலால் ஏற்படுவது , ஞானம் என்பது குண்டலினி மேல்
நோக்குதலால் ஏற்படுவது.
சந்தோஷம்
http://thirumoorthyrishis.blogspot.com/
Post a Comment