வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

ஞானமும் வாழ்வும்

இருளாக மௌனமாக இச்சையின்றி தேவையின்றி
இயக்கமின்றி இருப்பதுவே ஈசன் நிலை இதையுணர
இருள் நிலைக்கு மனமடங்கி ஈசனோடு ஒன்றாகி இணைந்த பின்னே உணர்வது தான் மெய்ப்பொருள் உணர்வாம்.
இருள் நிலையை உணர்வதற்கும் பொருள்வடிவம் மனம் கொண்டால் எவ்வாறு பொருந்துமது எண்ணமின்றி மனம் ஒடுங்கி
இருளாகி பழகுவதற்கு ஏற்ற வழி உயிர் உணர்வே
இந்த மறை பொருள் உணர்த்த குரு அடி தொடர்வீர்....

எதிர்பார்த்தல் ஏமாற்றம் தவிர்த்து விட்டபோது
இயற்கையிலே நமக்கமைந்த ஆற்றல் ஆக்கவழியில்
எதிர்ப்பின்றி தடையின்றி எழுச்சிபெற்று ஓங்கும்
எச்செயலும் மன வலுவு நுட்பத்தோடு ஆகும்
எதிர்காலம் வாழ்க்கைத்துறை அனைத்திலும் புத்துணர்வும்
இன்முகமும் தொண்டாற்ற பலர் நட்பும்கூடும்
எதிர்பார்த்து அறிவடைந்த ஏழ்மை நிலை தாண்டி
எப்போதும் வளம் நிறைந்த மன நிறைவு உண்டாம்!

-- ஞானமும் வாழ்வும் கவி எண் 277

No comments: