திக்கெட்டிலும் திரிந்து
திகட்டா பேரின்பன்
அறிந்தவர்க்கு அழியா அரூபன்
அறியாதவர்க்கு அறிவித்த ரூபன்
பக்த்தியில் பரவி ஞான
முக்தியில் முடிவானவன்
மோனத்திலே முத்ர்பவன்
முதிர்ச்சியில் மோனமானவன்
அணுவிலே உயிரானவன்
உயிரே அவனானவன்
அவனே மாயையாகி
அதிலே அவனியாகி
அவனிக்குள் அவனாகி
அவனே அறிவாகி
அடைவதில் பேரின்பன் - என்றும்
அவனே பேரின்பன்
No comments:
Post a Comment