வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

சங்கற்பம் / வாழ்த்து

வாழ்க வளமுடன்!
வாழ்க வையகம்!!

சங்கற்பம் / வாழ்த்து :

அருட்பேராற்றல் கருணையினால் உடல் நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று மேலோங்கி வாழ்வேன்

உலக நல வேட்பு:

உலகிலுள்ள பொறுப்புடைய தலைவரெல்லாம்
உயிரறிவை உள்ளுணர்வாய்ப் பெறுதல் வேண்டும்.
உலகனைத்து நாடுகளின் எல்லைகாக்க
ஓருலகக் கூட்டாட்சி வலுவாய் வேண்டும்.
உலகில் போர் பகை அச்சமின்றி மக்கள்
உழைத்துண்டு வளம்காத்து வாழவேண்டும்.
உலகெங்கும் மனிதகுலம் அமைதியென்னும்
ஒரு வற்றாத நன்னிதி பெற்றுய்யவேண்டும்.

ஐந்தொழுக்கப் பண்பாடு:

புதியதொரு பண்பாடு உலகுக்கு வேண்டும்.
போதை, போர், பொய், புகை ஒழித்துப் பொறுப்போடமுல் செய்வோம்அதிகசுமை ஏதுமில்லை
1) அவரவர் தம் அறிவின் ஆற்றலினால்
உடல் உழைப்பால் வாழ்வதென்ற முடிவும்,
2) மதிப்பிறழ்ந்து மற்றவர்கள் மனம் உடல் வருத்தா மாநெறியும்,
3) உணவுக்குயிர் கொல்லாத நோன்பும்,
4) பொதுவிதியாய்ப் பிறர்பொருளை வாழ்க்கைச்
சுதந்திரத்தை போற்றிக் காத்தும்,
5) பிறர் துன்பம் போக்கும் அன்பும் வேண்டும்.

இறை வணக்கம்:

எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ல்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்
கல்லார் கற்றார் செயல் விளைவாய் காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீஅவனில்தான் நீ, உன்னில் அவன் அவன்யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அதுமுக்தி.

Be Blessed By the Divine!

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நீங்கள் மகரிஷியின் தியானங்கள் கற்றிருக்கீர்களா?

Vedha said...

yes,,