வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Monday, December 18, 2006

விழிப்பு வேண்டும்

நீர் நிறைந்த பாண்டத்தில் காற்றேரா. நித்தியமாம்
மெய்ப்பொருளால் நிறைந்த உள்ளம்
ஊர் உலகப்பொருள் கவர்ச்சி உணர்ச்சி
ஏதும் உள் நுழையா. இப்பேறு தவத்தால் அன்றி
யார் பெறுவர் யார் தருவர் அறிவு ஓங்கி.
அதுவே தான் மெய்ப்பொருள் என்றறியும் பேற்றை
சீர் நிலையில் மனம் வைத்து வேண்டாப்பற்றை
செதுக்கிக் கொண்டே இருக்கும் விழிப்பு வேண்டும்

வேதாத்திரி மகரிஷி

No comments: