வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, March 21, 2007

மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்

சில நேரங்களில் நமக்கு இப்படி ஒரு உணர்வு தோன்றுகின்றது: "நம்ம நல்ல குணத்தோட இருக்கோமே, நம்ம பிள்ளை மட்டும் என் இப்படி குரங்கு மாதிரி இருக்கு?' - வேததாதிரியம் இது போன்ற சந்தேகங்களுக்கு அருமையான விடைகளை தருகின்றது.வேததாதிரி மகரிஷி எந்த கேள்விக்கும் தான் அகக் காட்சிகளால் உடனே பதில் அளிப்பவர் . அப்படி சொன்ன விடைகளில் ஒன்று தான் இந்த latent-patent imprints, அதாவது மேலடுக்கு-கீழடுக்கு பதிவுகள்.சற்று ஆய்வோமா?ஒரு பையில் மூன்று பந்துகளை போடுவதாகக் கொள்வோம். ஒன்று சிவப்பு; ஒன்று பச்சை; ஒன்று வெள்ளை . இப்போது ஒரு பந்தை எடுப்போம். என்ன நிறம் வரும்?பச்சை அல்லது சிவப்பு அல்லது வெள்ளை - அதாவது போட்டதில் ஒன்று தான் வரும். இப்படி போட்டதில் ஒன்று வெளியில் வருவது தான் பதிவு வெளிப்படல். அதாவது நம் எண்ன அலைகளின் மையம் ஆன கரு மையம் காலம் நேரம் எல்லாம் பார்த்து தன்னகத்தே உள்ள ஒரு என்ணத்தை சரியாக மலரச் செய்யும். அதாவது இல்லாதது வராது . இது ஒரு அடிப்படை அறிவியல் உண்மை.சரி இப்போ அந்த பையில மேலும் இன்னும் மூன்று நிறமுடைய பந்துகளை போடுவோம். போட்டு உங்கள் மகனிடம் ஒன்றும் சொல்லாமல் கொடுத்து விடுங்கள் . அவர் ஒரு பந்தை எடுக்கிறார். அவருக்கு ஒரு நிறம் கிடைக்கின்றது.அது நீங்கள் போட்ட 6 நிறங்களில் ஒன்று தானே . வேறு ஒன்றாக இருக்க வாய்ப்பே இல்லையே ? இது தான் சன்சித் கர்மா. உங்கள் பதிவுகள் அவரிடம் வெளிப்படல்.அவரும் மேலும் மூன்று புது நிற பந்துகளை போடுவதாக கொள்ளுவோம். இப்போ மொத்தம் 9 பந்துகள் 9 நிறங்களில். இப்படியே ஒரு பத்தாயிரம் தடவை போட்டு போட்டு கொடுப்பதாக கொள்வோம். கடைசியில் ஒருவர் ஒரு பந்தை அந்த பையில் இருந்து எடுகின்றார்.இந்த சூழ்நிலையில் 2 வாய்ப்புகள் உள்ளன. ஒன்று மேலாக உள்ள பந்து எளிதில் வெளியே வந்து விடும். அல்லது கீழுள்ள பந்து கூட சில நேரங்களில் பையிலிருந்து வெளி வந்து விடும்.இப்படி மிக அதிகமான காலத்துக்கு உள் இருந்து உள் இருந்து யாருக்குமே தெரியாத ஒரு பதிவு ஒரு கால கட்டத்தில் கருமையத்தில் இருந்து வெளி வருவது தான் latent imprint அல்லது கீழ் நிலைப் பதிவு. அடிக்கடி தலையைக் காட்டும் மேலுள்ள பந்து தான் 'மேல் நிலைப் பதிவு' அல்லது patent imprint.இந்த latent மற்றும் patent பதிவுகள் தான் நம்மை நல்ல மனிதனாகவும், சில சமயங்களில் நாம் மகனை சற்று தீய குணத்தொடும் உருவாக்கி விடுகின்றது.இது போன்ற கண்டுபிடிப்புகளுக்காகவே 'வேததாதிரி' என்ற மஹான் நம் மனத்தில் ஒரு உயரிய நிலையை அடைகின்றார். நம்மை வழி காட்டவும் செய்கின்றார், இது போன்ற கண்டுபிடிப்புகளால்.

No comments: