வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, March 29, 2007

நம் குருனாதர்

மோனத்தில் வாய் மூட எண்ணம் தோன்றும்முனைந்தவன் யார்?மோனத்தின் பெருமை தன்னை எளிதா சொல்ல.?மோனமே எல்லாவற்றுக்கும் அடித்தளமாம்.மிக விரிவு.எல்லை இல்லை.இவை எல்லாம் நம் குருனாதர் நமக்காக எழுதி வைத்தவைகள்.அன்புள்ள நண்பர்களே,குருவின் கவிகளை நம் சிரத்திள் வைப்போம்.வள்ளல் பெருமானார் திருவாசகத்தை தன் சிரத்தில் எப்போதும் வைத்த மாதிரி.சிரத்தில் என்றால் நம் மூளைக்குள் ஏற்றுக்கொள்வோம்.நம் குருவிற்கு நாம் செலுத்தும் அன்பின் அடையாளமாக அவரின் சொல்லை பரப்புவோம்.

உன் முனைப்பு நிலவு ஒளி ரவியால் போலஉயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்....

இவ்வார்த்தைகளை நாம் நம் சிரத்தில் கொள்வோம். மிக நுணுக்கமான விசயம் என்பதால், மிக நீண்ட பயிற்சி அவசியம். வாழ்க்கை முழுவதும் நம் அப்பனிடம்(குருவினிடம்) நம் சரணாகதியை சமர்ப்பிபோம்.ஒரு நாள் வரும்... நம் வாயால் நாம்,

உன்னுள்ளே நான் அடங்க என்னுள்ளே நீ விள ங்கஉனது தன்மை ஒளிர எனது உள்ளத்தூய்மை பெற்றேன்இன்னும் வேறென்ன வேண்டும் இப்பேர்று பெற்ற பின்னர்எடுத்த மனிதப்பிறப்பெய்தியதே முழுமை...

என்று நாமே நம் குருவின் பாதத்தில் விழுந்து ...அப்பா...என்னை..இப்பிள்ளையை இன்று போல் என்றும் உங்களின் குழந்தையாகவே வைத்துருங்கள் என்று ஆனந்தத்தால் உருகி அழுவோம்.தன் செயல் எண்ணி தவிப்பது தீர் ந்திங்கு நின்செயல் செய்து நிறைவு பெறும் வண்ணம்நின்னை சரணடை ந்தேன் ...என்று பாரதியின் கவியாய் நம் குருவின் பாதத்தில் சரண் புகுவோம்....உஙகள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.

No comments: