வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, March 21, 2007

DNA and கருமையம்

நான்: இந்த DNA என்பது வேததாதிரிய அறிவியலில் என்ன ஐய்யா?நம் வேததாதிரிய

அன்பர் : அது ஒண்ணும் இல்லப்பா. கருமையம் மாதிரி தான் ...

நான்: சும்மா சொல்லாதீங்கயா...

நம் வேததாதிரிய அன்பர் : நம்ப மாட்டியா? அப்போ இப்படி வெச்சிக்கலாம், நான் ஐந்து கேள்வி கேக்குறேன், DNA ன்னா என்னான்னு உன் வாயிலிருந்தே வரும், தெரியுமா?இந்த deal எனக்கு பிடிச்சிருந்தது சரி என்று சொல்லி விட்டேன். கேள்விகள் வந்தன , நம் வேததாதிரிய அன்பரிடம் இருந்து. ஒரு பிடி பிடித்து விட்டார் என்னை !நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 1 - ஒரு செல் உயிரி யில் காந்தம் உண்டா ?

நான் : உண்டு, அதுவும் அணு கூட்டமே, அதனால் உண்டு.

அன்பர் : கேள்வி 2 - சரி காந்தம் இருந்தால், அந்த ஒரு செல் உயிரி யில் காந்தம் தினிவு பெற்ற மையம் ஒன்று உண்டா ?

நான் : உண்டு, காந்தம் இருக்கும், அது துல்ளிய சம தள சீர்மை ஆற்றலினால் ஒரு மையத்தை பெற்று இருக்கும். சுவாமிஜி இதை specific gravity principle என்று கூட அழைகின்றார்களே!நம் வேததாதிரிய

அன்பர் : சரி தான் . இப்போ கேள்வி 3 - காந்தம் , தான் தினிவு பெற்ற மையத்தில் ஒரு அழுத்த புள்ளியை , அதாவது ஒரு காந்த பதிவை (magnetic imprint) ஏற்படுத்துமா இல்லயா?

நான் : ஏற்படுத்தத் தான் செய்யும். அப்படித் தானே சுவாமிஜி சொல்றாங்க...

நம் வேததாதிரிய அன்பர் : அப்படி வாய்யா வழிக்கு , இப்போ கேள்வி 4 - அந்த காந்த பதிவை பெற்ற ஒரு சிறு பகுதி அந்த செல்லின் blue print மாதிரி செயல் படத் தானே செய்யும். சரி தானே?

நான் : நிச்சயமாக. அப்படித் தானே சுவாமிஜி சொல்லி இருக்காங்க!நம் வேததாதிரிய அன்பர் : கேள்வி 5 - ரொம்ப எளிமையான கேள்வி இது : அறிவியலில் ஒரு செல்லின் blue print ன்னு எதை அழைக்கிறார்கள் ?நான் : DNA யை.

நம் வேததாதிரிய அன்பர் : இப்போ சொல்லுங்க, ' DNA என்பது ஒரு செல் உயிரியின் கரு மையம் ' என்று சொன்னால் அது சரி தானே!

நான் : நூற்றுக்கு நூறு சதவீதம் சரி தான் ஐயா!நம் வேததாதிரிய அன்பர் : நாம எல்லாருமே அந்த ஒரு செல் உயிரின் பரிணாம தோற்றங்கள் தானே...செல்கள் multiphy ஆனதால் தானே நாம் வந்தோம். அப்பொழுது நம்முடைய எல்லா செல்களிலுமே DNA இருக்கத் தானே செய்யும்.நான்: சரி தான் ஐய்யா. எப்படி ஐயா இப்படி எல்லாம் கண்டு பிடிக்கிறீங்க ?நம் வேததாதிரிய அன்பர் : நல்லா ஆழமா தவம் செய்யுங்க தம்பி - இதை எல்லாம் சுவாமிஜி ரொம்ப நல்லாவே குடுப்பாங்க - எல்லாருக்கும்.நான் :நன்றி ஐய்யா ! மிக்க நன்றி!! உரையாடலை படித்து முடித்து விட்டீர்களா, இதையெல்லாம் சொல்லக் கூடிய மகான் நம் கரு மையத்திலும் வர வேண்டும் ன்னு ஒரு ஆசை எழுகின்றது அல்லவா...வாங்க ஐய்யா தவம் ஆழமா செய்யலாம்...

வா ழ் க வ ள மு ட ன் .

No comments: