வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Tuesday, July 07, 2009

தேவை தவமும் குருவை அணுகுதலும்

வாழ்க வளமுடன்.

குருவின் திருவருளால் எந்த நிலையிலும் ஒருவர் அமைதியை பெற முடியும்.

தேவை தவமும் குருவை அணுகுதலும்.

எண்ணமின்றி எதுவுமில்லை. எண்ணத்திற்கப்பாலும் எதுவுமில்லை என்று அடிக்கடி நம் குரு நாதர் சொல்வார்.

நாம் இயல்பாய்க்காணும் நம் வாழ்வு என்பது நாம் அறிந்தோ அறியாமலோ விரும்பியதாகவே இருப்பதை அமைதியாக இருந்து விசாரித்தால் தெளிவாகும்.

எப்போதும் நாம் காணும் எண்ணத்தின் அழுத்தமே தான் இரவிலே நமக்கு கனவிலும் தொடர்கின்றது. பகலிலே நம் எண்ண அலை எப்படி இருக்கின்றது? எவ்வளவு நேரம் குருவைப் பற்றி இருக்கின்றது? என்று பார்த்தால் குறை எங்கே என்று புரிந்து போகும்.

ஏந்த தவமும் நன்றாக அமைய எண்ண அலைகள் குறைந்து வர வேண்டும். தவம் மணிக்கணக்கில் செய்தாலும், எண்ணத்தின் அழுத்தம் குறையாமல் இருந்தால் அங்கே தவமே நிகழ வில்லை எனக்கூறலாம். எண்ணத்திலே அழுத்தமாக உள்ளதை குருவின் மேல் திருப்பி விட்டு, கடமையை செய்து வாருங்கள்!

எதையும் அடிக்கடி நினைந்து வர, அதுவாகவே நனவிலும், கனவிலும் வருவதை காணலாம். எல்லாம் பழக்கத்திலே இருக்கின்றது.

சும்மா கடமைக்கு, எங்க வீட்டு ஐயாவும் கச்சேரிக்கு போகிறார் என்பது போல கண்ணை மூடி உட்கார்ந்து, பஞ்ச பூதத் தவம், நவக்ரகத் தவம் என்று மாற்றி மாற்றி செய்து விட்டால் எதுவும் மாறாது.

எப்பொருளை எச்செயலை எக்குணத்தை
எவ்வுயிரை ஒருவர் அடிக்கடி நினைந்தால்
அப்பொருளின் தன்மையாய் நினைப்போர் ஆற்றல்
அறிவினிலும் உடலினிலும் மாற்றங்கானும்.

எதை நினைந்தால் உயர்வு உண்டாகுமோ அதையே நினைந்து வர வர, மாற்றம் கண்முன்னே நிகழும்.

எந்த எண்ண அழுத்தத்தையும் விட, குருவே உயர்ந்தவர். அவரின் வழியை முறையாக தொடர்ந்தவருக்கு அமைதி என்றுமே நிலைத்து விடும்.

வாழ்க வளமுடன்.
Sundararajan.R

No comments: