அறிவினது நிறைநிலையை ஆதியாகஅமைதி நிலையில் அறிந்து அதுவாம்போதுஅறிவு உயர்ந்தகன்றமைதிப் பேரின்பத்தில்அணுமுதலாய் அண்டகோடி தானேயாகி அறிவே அவ்வந்நிலையில் ஒழுங்கியக்கஅமைப்பாகி முறை பிறழாதியங்கும் மேலாம்அறிவின் பெருமையுணர்ந்த இன்ப வெள்ளத்தானந்தத்தில் திளைக்க வாரீர் வாரீர்.
அருட்தந்தை வேதத்திரி மகரிஷி அவர்கள் "ஞானமும் வாழ்வும் "என்ற புத்தகத்தில் 14 வது செய்யுளில் மனிதருள் ஏன் வேறுபாடு வருகிறது என்பதை மிகவும் எளிமையாக ஏற்புடையதாகவும் வழங்கியிருக்கிறார்:
கருவமைப்பு, உணவு வகை, காலம், தேசம்,கல்வி, தொழில், அரசாங்கம், கலை, முயற்சி,பருவம், நட்பு, சந்தர்ப்பம், பல ஆராய்ச்சி,பழக்கம், வழக்கம், ஒழுக்கம் இவற்றிற்கேற்பஉருவமைப்பு, குணம், அறிவின் உயர்வு, கீர்த்தி,உடல் வலிவு, சுகம், செல்வம், மனிதர்கட்குவரும் வகையும் அவற்றின் தரம் அளவுக்கேற்பவாழ்க்கை நிலை பேதமுடன் தோன்றக் கண்டேன்"
No comments:
Post a Comment