முள் எடுத்து ஒருவர் பிறர் மீது குத்த
முனிவரெனினும் துன்பம் நிச்சயம் ஆம்.
எள் அளவும் பிறர் தீங்கு நினையா ஞானி
எனினும் அவர் துன்ப அலை சாபமாகும்.
உள் உணர்ந்தோர் அது கூட நிகழா வண்ணம்
ஒறுத்து அவர் திருந்தி வாழ வாழ்த்துவார்கள்.
கொள் அன்பா இக்குணத்தை மெய் விளக்க
குழுவினிலே உண்மை உறுப்பினர் நீயானால்.
Guru vaazhga Guruve thunai
No comments:
Post a Comment