குரு சரணம் ஞான குரு சரணம்
குல அமைதி காக்க குண்டலினி யோகம் தந்த (குரு)
உடல் உயிர் உளப்பயிற்சி உவப்புடனே இருபால்
உள்ளங்களுக்குவந்தளித்த உமைப்பணிவோம்
உலகப்பொதுமறைக்கு உட்பொருள் விளக்கம் காட்டி
ஊழ்வினைகள் களைய நல் மன வள கலை தந்தாய் (குரு)
சினம் வேரறுத்து சிந்தனை ஆராய்ந்திட்டு
சீரமைத்த இச்சையினால் சித்தம் உய்யும் வழி
றிந்துஉன்னதக்கோட்பாட்டிலே உலகமைதி காக்க நல்
வேதாத்ரியம் என்ற புது வேத நூல் ஈந்த
வேத மகா குருவே உமை பணிவோம் (குரு)
பஞ்ச பூத தத்துவத்தை பாங்காய் உணர்த்திட்ட
பாமர ஞானியே உம் பதம் பணிவோம்
காந்தத் தத்துவம் மூலம் பிரணவ பொருள்
உரைத்துகடவுள் விளக்கம் காட்டிய கற்பக தருவே
கரம் குவித்தே உங்கள் சிரம் பணிவோம் (குரு)
பிரபஞ்ச தன் மாற்றமாய் பூரண பொருளே
உயிர் முதல் ஆறாக உயர்ந்துள்ளது என்ற
அற்புத தத்துவத்தை அகத்தவத்தின் மூலம்
அவனி முழுதும் ஈந்த அருமருந்தே
எங்கள்அருட் சுடரே ஞான ஒளி விளக்கே
kalyani Madam.
No comments:
Post a Comment