அன்புள்ள நண்பர்களே,
இந்த சமுதாயத்தில், ஆண்களே தான் தியானம் செய்து இறை நிலையை அடைய முடியும் என்று ஒரு நிலை இருந்தது! வேதத்தையே சொன்ன சான்றோர்கள் வாழும் காலத்தில் கூட பெண்கள் தவத்தில் ஈடுபட தடை இருந்தது! உண்மையை, வேதமாக சொன்னவர்கள் ஏன் பெண்களை இப்படி ஒதுக்க வேண்டும் என்று எனக்கு ஒரு சிந்தனை இருந்தது! இருப்பினும் ஏதாவது காரணம் பார்த்தால், மாத விலக்கு மட்டும் தான் பெண்களுக்கு ஒரு தடையாக இருக்க முடியும் என்று தோன்றுகிறது! அதனால் தானோ என்னவோ பெண்களில் ஞானிகள் மிக மிக குறைவாக இருக்கிறதோ என்று தோன்றுகிறது! சரி... மாத விலக்கு ஏற்படும் போது ஏன் தவம் செய்யக்கூடாது? தியானம் செய்வதால் நமக்கு நம் உடலில் உள்ள ஐம்புலன்களும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி உயிர் சக்தி சேமிக்கப்படுகிறது! அதனால் உயிர் சக்தி சேமிக்கப்படுவது மட்டுமின்றி தொடர்ந்து நாம் த்வம் செய்வதால், உடலில் சக்தி அதிகமாகிறது! அதைத்தான் நாம் சாந்தி தவம் செய்து உடல் சக்தியாக மாற்றிக்கொள்கிறோம்! மேலும் மாதவிலக்கு உள்ள பெண்களுக்கு அந்த காலத்தில், இயற்கையாகவே உடலில் உள்ள ரசாயன மாற்றத்தால் உடலில் உபரியாக உள்ள சக்தியானது வெளிப்படுகிறது! அதோடு மட்டுமின்றி உடலைச்சுற்றி அந்த உயிர்சக்தியானது அதிர்வாகிறது(vibration)! எனவே அந்த காலத்தில் தவம் செய்வதால் பெண்களின் உடலில் மீண்டும் உயிர்சக்தி சேமிக்க முயலும் போது, உபரியான சக்தியுடன் தவத்தின் சக்தியும் சேர்ந்து சிலவாக நேரிடும் அபாயம் இருக்கிறது! இதனால் தான் மாத விலக்கு உள்ள பெண்கள் தவம் செய்யக்கூடாது என்று ஒரு கட்டாயம் உள்ளது! தவிர இந்த கட்டாயம் பெண்களுக்கு ஒரு தடை அல்ல! இந்த தடை பெண்களுக்கு இயற்கையாகவே தேவைப்படுகிறது! முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் ஏறு படி தவம் மட்டும் தான் இருந்தது! அதனால் தான் பெண்கள் ஒதுக்கப்பட்ட்னர்! இப்போது நம் குரு நாதர் தான் இறங்கு படி தவம் கற்றுத்தந்து பெண்களும் கூட தாராளமாக தவத்தை மாத விலக்கு தவிர மற்ற காலத்தில் செய்து சாதனையாக ஞானம் அடையலாம் என்று அருள் செய்து இருக்கிறார்!பெண்களுக்கு மாத விலக்கு உள்ள காலத்தில் அவர்கள் மிக அருகில் ஆண்கள் செல்ல நேர்ந்தால் மூலாதாரத்திலேயே இருக்க வேண்டும் என்றும் பெண்கள் சமைத்த உணவை உண்ணும் ஆண்கள் மூலாதாரத்திலேயே இருக்க வேண்டும் என்று நம் குரு நாதர் கூறியிருப்பது எல்லாருக்கும் நன்மைக்காகவே அன்றி யாரையும் உயர்த்துவதோ அல்லது தாழ்த்துவதோ காரணம் அல்ல! அம்மா என்றழைக்கப்படும் மாதா அமிர்தானந்தமாயி அவர்களுக்கு சிறு வயதிலேயே மாதவிலக்கு நின்று விட்டதாக அவரின் சரிதையில் சொல்லியிருக்கிறார்கள்!ஆனால்,இயற்கையாக மாதவிலக்குடன் இருக்கும் பெண்களும் தவத்தை மாதவிலக்கு தவிர மற்ற காலத்தில் செய்து மாதா அமிர்தானந்தமாயி மாதிரி, ஞானம் அடைய வேண்டும். அது தான் நம் குரு நாதருக்கு பெருமை! பெண்களுக்கு ஞானம் தடையே அல்ல! ஆண்களுக்கு மட்டுமே ஞானம் சொந்தமல்ல!ஒரு புதிய வரலாறு பெண்களால் படைக்கப்பட வேண்டும்! நம் குருவிற்கு மேலும் ஒரு பெருமையைத் தேடித்தர வேண்டும்! !
No comments:
Post a Comment