தன்முனைப்பு நீங்க ஒரு குரு அடைந்து
தவமாற்றும் சாதனையால் உயரும்
போதுநன்முனைப்பாம். அருட்தொண்டால் பயன்காண்போர்கள்
நாதழுக்கப் பெருமையோடு போற்றுவார்கள்.
உன்முனைப்பு நிலவு ஒளி ரவியால் போல
உயர்குருவின் ஒளி என்றே உணர்ந்தடங்கு.
"என் ஒளியே சிறந்ததினி ரவி ஒளி ஏன் எனக்கு?"
என்று நிலவு எண்ண இருளே மிஞ்சும்.
No comments:
Post a Comment