வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Wednesday, December 20, 2006

தவத்தின் மகிமை

தவம் என்றால் த = தன், வ = வசப்படுத்துதல், ம்.= அம்மாகிய மனது(இங்கு மெய்ப்பொருளே உயிராகவும் அதுவே மனமாகவும் செயல்படுவதால்,) அதாவது தவத்தில் நாம் நம் மனதை அதன் (5 புலன்) வயத்திலிருந்து 6வது அறிவாகிய மெய்யறிவை அறியும் பயணத்திற்கு கொண்டு சென்று எந்த இடத்திலிருந்து வந்ததோ அந்த "மாபெறும் " இடத்திற்குச்செல்லும் மார்க்கத்தை"கண்காட்சி மூலம் அதாவது நெற்றிக்கண் காட்சி வழியாக் காணுவது தான் தவம் ஆகும்.

"அறிவதனை கருவினிலே இணைத்து தவம் ஆற்ற ஐம்புலனும் அமைதி பெறும் அறுகுணமும் சீறாம்",

என்றும்

"அறிவு துரியாதீத நிலை நிற்க நிற்க ஆதியாம் மெய்ப்பொருளாம் அரும் பிறவித்தொடரே"

என்றும் மகரிஷி பாடியிருக்கிறார்.அத்தகைய அரிய தவத்தின் மகிமையை நாம் எளிதில் விரித்துரைக்க முயல்வது சற்று கடினமே. என்றாலும் இறைநிலையோடு எண்ணத்தைக்கலக்கவிடும்போது அதாவது மண்ணின் ஆழம் போகப்போக தன்ண்ணீர் கிடைப்பது போல மனதின் ஆழமான துரியாதீதத்திற்குப் போகப் போக நம் உடலில் செல்களின் வேன்டாத பழக்கப்பதிவுகளை மாற்றி நற்பழக்கப்பதிவுகளாக மாற்றி அமைத்துக்கொள்ளலாம். நம் மகரிஷி , " தன்னை அறிந்து இன்புற ஒரு அருமையான தந்திரமான "தவத்தை நமக்கு ஆன்மீகப்பரிசாக அளித்துள்ளார்கள்.அந்தக்காலத்தில் தவசிகளை காட்டில் வாழும் கொடிய விலங்குகள் கூட ஒன்றும் செய்யாது என்பார்கள். தவசிகள் இறைவனோடு கலக்கின்றனர். அதுபோல் இறையே விலங்குகளாகவும் வந்துள்ளது எனும்போது அதனுள்ளிருக்கும் உண்மையான இறைவனுக்கு இறைவனை அடையாளம் காண்பது எப்படி முடியாமல் போகும்? அதுதானே தவ மகிமையும் கூட. சிறிப்பாயும் புலிகூட சிறு பூனையாகிவிடுமே தவசிகளின் காந்த சக்தியால். இனம் இனத்தைக்கண்டுகொள்ளும் செயலாகும்.அதாவது விலங்குகளுக்குக் கூட அந்த நேரத்தில் பாயும் குணம் நீங்கி பணியும் குணம் வந்துவிடும். அத்தகைய சிறப்பைப்பெற்றது தவம்.அத்தகைய அகத்தவத்தால் நாம் உள்ளுணர்வுகளையும், விஞ்ஞான நுட்பங்களையும் கூட உணரலாம் என்கிறார் நம் அருட்தந்தை. "உருமாறி பிறப்பென்னும் கடல் வீழ்ந்து கரை கணாது உழலும் மந்தன் கருமாறி அருட்தெப்பம்தனில் ஏற்றி முக்தி எனும் கரை சேர்க்கும் பெருமாளே"என்ற் ஆழ்வார் பாடலுக்கேற்ப முக்தி அடைய கருவை(from MOOLADHAARAM TO AAGNA) மேலேற்றி அகத்தவம் என்ற தோணியிலே அறநெறி என்ற துடுப்பைக்கொண்டு பிறவிக்கடலை நாம் நீந்த அருமையான வழியை நம் அருட்தந்தை அவர்கள் கொடுத்த தவத்தினை கடைபிடித்து அதன் பயனை நாம் அனைவரும் என்னாளும் எப்பொழுதும் பயனடைவோமாக. வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் !

No comments: