வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

Thursday, December 21, 2006

பெண்மையின் பெருமை

பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான் - புவி
பேணி வளர்த்திடும் ஈசன்;
மண்ணுக் குள்ளேசில மூடர் - நல்ல
மாத ரறிவை கெடுத்தார்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் - குத்திக்
காட்சி கெடுத்திட லாமோ?
பெண்க ளறிவை வளர்த்தால் - வையம்
பேதமை யற்றிடுங் காணீர்.

இதையேத்தான் மகரிஷி வேதாத்ரி அவர்கள் இன்னும் உறுதியாக,பெண்கள் ஆண்களைவிட சக்தி வாய்ந்தவர்கள் என்கிறார்."உலகின் மிகப்பெரிய விஞ்ஞானிகளாகட்டும்,படைப்பாளிகளாகட்டும்,கண்டுபிடிப்பாளர்களாகட்டும்,ஒரு துளி வித்தை வைத்து ஒரு அழகான குழந்தையை உருவாக்க முடியுமா? முடியாது......ஏனெனில் அது பெண்மைக்கே உரிய தாய்மையெனும் அரிய பொக்கிஷம்.வேறெந்த சக்தியாலும் ஈடு செய்ய முடியாதது.ஆகவே பெண்மையை போற்றுவோம் மகரிஷிகளின் விளக்கத்திற்கு மறுபேச்சு தரமுடியுமா?!

No comments: